
தமிழ்நாட்டில் “புரட்சி தலைவர்”,புரட்சி கலைஞர், புரட்சி தளபதி, புரட்சி தமிழன், புர்ட்சி என்று ’புரட்சி’ கேலி செய்யப்படலாம். சமுக புரட்சியை நடத்த தான் விஜயகாந்துடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று போலி கம்யுனிஸ்டுகள் பல் இளிக்கலாம்,ஆனால் உழைக்கும் மக்கள் ஒரு நாள் அதிகாரத்தை கைப்பற்றபோவதின் குறியிடல்லவா இந்த கம்யுனிஸ்ட் புரட்சி.அதை இன்று முத்லாளிகளின் ஐந்தாம் படை திரித்தாலும் கேலி செய்தாலும், கம்யுனிஸத்தை அவர்களால வீழ்த்த முடியவில்லையே! ஏன்?
முன்பை விட அதன் மீது காழ்புணர்வுடன் தானே இருக்கிறார்கள்.அதிக அவதூறுகள், திரிபுகள் சொல்லி திரிகிறார்கள். செத்தொழிந்துவிட்டதாக அறிவித்துவிட்டு பின்பு ஏன் அவர்கள் செத்த பாம்பை அடிக்க வேண்டும்? ஏனென்றால் அந்த கம்யுனிஸ்ட் பூதம் இப்பொழுது முதலாளிகளின் கருவறையான அமெரிக்கவையே ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கிறது.
ஊரை சுரண்டி உலகத்தையே சுரண்டிய அமெரிக்க வல்லரசு, கடைசியில் த்ன் நாட்டு மக்களுக்கு காய்ந்த ரொட்டி துண்டுகளை கொடுக்க முடியாத அவல நிலைக்கு சென்றுவிட்டது.
“OCCUPY” போராட்ட்த்தில் ஒரு அரசு மீட்டிங்கில் புகுந்து மக்கள் ஆரவாரமாக கோஷமிடுகிறார்கள், ”அரசுக்கு ’உண்மையான ஜனநாயகம்’ என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டுமா? எங்களிடம் வாருங்கள் சொல்லிதருகிறோம்” என்கிறார்கள்.
இன்னொரு பக்கம் முன்பை விட உலகம் அதிகமான மக்கள் எழுச்சியையும் அதை விட அதிகமான அடக்குமுறையையும் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஹாலிவுட் சினிமாக்களில் இப்பொழுதெல்லாம் கார்பரேட் தான் வில்லன்.கம்யுனிஸ்ட்டல்ல.
மக்கள் திரள் அதன் எழுச்சி அதன் போர்குணமிக்க போராட்ட்த்தை அரசு தாலாட்டுப் பாடி தூங்க வைத்துவிடலாம் என நினைக்கிறது. அமெரிக்க அதிபர் என்ன செய்வதென்று தெரியாமல் நாட்டு பிரச்ச்ணைக்கு மக்கள் முன் வந்து அறிவுறை கூறலாம என் அழைப்பு விடுக்கிறார். பல நாடுகளை அதை சர்வாதிகாரியிடமிருந்து மீட்டதாக பீற்றிக்கொள்ளும் அமெரிக்க ராணுவம் அடுத்து உண்மையாகவே போரிடவேண்டுமென்றால் அமெரிக்க மக்களுடன் இணைந்து அதன் அரசை எதிர்த்து தான் போரிட வேண்டும். இந்த ஒரு முறையாவது அவர்கள் ஒரு காரணத்தோடும், மக்கள் நலனுக்காகவும் போரிட்ட மகிழ்ச்சியை அடையளாம்.
ரஷியாவில் முத்லாம் உலக போர் முனையில் குளிரில், ரொட்டி இல்லாமல், குண்டில்லாமல் சண்டை போட்ட ராணுவ வீரார்களை பார்த்து ரஷியாவின் மத்திய வர்கம். ஒழுங்காக சண்டை போட தெரியாத மடையர்கள், தேசபக்தியில்லாதவர்கள் என்றது. பின்னாலில் அந்த ராணுவம் உண்மையான தேச பக்தியை காட்டியது அக்டோபர் புரட்சிக்கு தோள்கொடுத்து.
அந்த மத்திய வர்கத்தை விடுங்கள் புரட்சி ரயில் பயணத்தை தொடங்கியவுடன் கடைசியில் எப்படியோ ஏறிவிடுவார்கள்...

http://www.occupytogether.org/
RED SALUTE
1 கருத்துக்கள்:
இன்குலாப் ஜிந்தாபாத்
என்று சொல்ல ஆசைப் பட்டாலும், அங்கிருக்கும் உணர்வு கூட தொழிலாளி வர்க்கத்தினரிடம் இன்று மங்கி வருவது வேதனைக்குரியதே... ஆட்சி செய்பவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்றும், கூடங்குளம் மக்கள் அறியாமல் போராடுகிறார்கள் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு[?] அணு மின்சாரம் தேவை என்றும், எதிரி நாடுகள்[?] கட்டுபடுத்த அணு ஆயுதம் முக்கியம் என்றும் லெனின் படத்தை போட்டு கொண்டு ஏகாதிபத்தியத்துக்கு கொடி பிடிக்கும் சிலரால்... புரட்சி வந்தாலும் நிலைக்குமா என்ற சந்தேகம் கண்ணெதிரில் ஆடிக் கொண்டிருக்கிறது...
இருந்தாலும் சொல்கிறேன் இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்ற மன நிலையில், தொழிலாளி வர்க்கத்தை குழப்புபவர்களுக்கும் சொல்கிறேன்.. உங்களுக்கும் சேர்த்து தான் நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம்..
இன்குலாப் ஜிந்தாபாத்
Post a Comment