அரசின் கோர திட்டங்களால் சுரண்டப்படும் மக்கள் அந்த உண்மையை தெரிந்துக்கொள்ளும் போது அடையும் எழுச்சி மகத்தானது, மரியாதைக்குறியது, ஆதரிக்கப்பட வேண்டியது. ஆனால்,அரசியலற்ற முறையில் நடக்கும் இந்த போராட்டங்கள் சுரண்டலுக்கு மத்தியில் ஒரு (விளம்பர) இடைவேளை தான். இறுதியில் அந்த கூட்டம் சில தற்காலிக வெற்றிகளில் தன்னை இழந்து, மறுசுரண்டலுக்கு தயாராகிவிடுகிறது.
சில மாதங்களுக்கு முன் நடந்த எகிப்த்து புரட்சி,அதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் நிகழ்ந்த மக்கள் எழுச்சி, உலகம் முழுவதிலும் முதலாளித்துவம் கையாலாகத நிலைக்கு வந்ததை தொடர்ந்து ஐரோப்பாவில் மக்கள் வீதிகளுக்கு வந்தது அதன் தொடர்ச்சியாக லண்டனில் வெடித்த கலவரம், இப்பொழுது அமெரிக்க வால்ஸ்ட்ரிட் ஆக்கிரமிப்பு.அன்ன அசரே முதல் கூடங்குளம் வரை மக்கள் உண்ணவிரதம் இருந்த்து என உலக முழுவதும் மக்கள் அரசின் கதைகளையும், அதன் கவர்ச்சிகர தேசபற்று எனு வஸ்த்துவையும், நாட்டின் முன்னேற்றேம் என்ற போலி முழுகத்தையும் தூக்கி வீச வீதியில் இறங்கியது எவ்வளவு மகிழ்ச்சியானது எவ்வளவு மகத்தானது.
லண்டன் கலவரத்தை தொடர்ந்து அமெரிக்காவின் மிகபெரும் பணக்காரரும், பங்கு சந்தை முதலீட்டின் ஜாம்பவானுமான வாரன் பாஃபேட் ஏதோ கம்யுனிஸ்ட் ரேஞ்சிற்க்கு ஒரு கட்டுரை எழுதியதும், இந்தியாவை திறந்துவிட்ட மன்மோகன் சிங்கே உலகமையமாக்கள் எங்களை ஏமாற்றிவிட்ட்து என முழங்கியதும். முதலாளித்துவத்தின் அழுகிய பக்கத்தையும், அதன் வீழ்ச்சியையுமே காட்டுகிறது.இனி முதலாளித்துவம் என்ற அட்டை கத்தி ஆப்பிள் நறுக்க கூட பயன்படாது அந்த காற்று பலுன் வெடிக்கும் நிலையில் உள்ளது. அதற்கான மாற்றை தேடுவதை பற்றி சிந்திக்க தொடங்கிவிட்டனர்.
சரி மார்க்ஸ் சொன்னது போல் முதலாளித்துவம் அத்ற்கான சவக்குழியை அதுவே தோண்டிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், ஐ சி யு யுனிட்டில் இருந்து அதை காப்பாற்ற அதனால் சுரண்டபட்ட மக்களே மறைமுகமாக உதவுவது தான் கொடுமையானது அதுவும், “தாங்கள் வஞ்சிக்கபட்டதற்க்கு நீதி வேண்டும்” என்ற முழகத்தின் மூலம்.
எகிப்த்தில் சில மாத்ங்களுக்கு முன் மக்கள் வீதியில் வந்து போராடினார்கள், ஆனால் ஒரு அரசியலற்ற போராட்டத்தின் இறுதி முடிவு, முபாரக் என்ற ஒரு சர்வாதிகரியிடமிருந்து அடிகாரத்தை வாங்கி ராணுவத்திடம் கொடுத்துவிட்டார்கள். லெபனானில் கடாஃபியிடமிருந்து அதிகாரத்தை வாங்கி அமெரிக்க முதலாளிகளிடம் கொடுத்துவிட்டார்கள்.
இதையெல்லாம் பார்க்கும் போது அரசியலற்ற போராட்டங்களின் விளைவு மக்களின் கோபத்திற்கான ஒரு வடிகால் தான் என்பது உறுதியாகிறது.
சில நேரங்களில் அரசே இதை ஸ்பான்ஸர் வேற செய்கிறது. இந்திய அரசுக்கு அன்ன அசரே போல். ஊழல் மீதிருந்த மக்களின் கோபம் அரசை தூக்கி போட்டிருக்க வேண்டும். வந்தார் அசரே கோபத்தை வற்ற செய்தார், சிரித்தார், கோஷம் போட்டார், எல்லாரும் கத்தினார்கள் சோர்ந்து போய் எதையோ ஒன்றை வெற்றி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்.
அமெரிக்க முதல் ரஷ்யா வரை அதன் பரிசோதனை களமாக மூன்றாம் உலக நாடுகளை மாற்றவும் அதனிடம் எஞ்சிய காயலாங்கடை உலைகளை விற்கவும், ஒரு நாட்டின் அணு திட்ட்ங்களை தன் கட்டுபாட்டில் வைத்துக்கொள்ளவும் உதவி செய்யும் இந்த அணு உலை திட்டங்களை, அதன் அரசியல் பின்னானி தெரியாமல் போராட சென்றனர். கூடங்குளத்தில், அதற்க்கு சில அற்வுஜீவிகள் குரல் கொடுத்தார்கள் ”தென் தமிழகத்தை அழிக்கும் கூடங்குள அணு உளையை மூடு” என்று, அப்போ கல்பாக்கம் அணு உலை அது அவர்களின் அஜெண்டாவில் இல்லை.
உண்ணாவிரதமிருந்த மக்கள் சோர்ந்து போன நிலையில் அரசு அப்பொதைக்கு எதையோ சொன்னது, பணிவது போல் நடித்த்து. ஒரு தீர்மானம் வந்தது. பின்பு அணு உலை சில நாட்களில் இயங்க தொடங்கும். ஏனென்றால் இது ஏகாதிபத்திய நாடுகளின் பிரச்சனை, கூடங்குளம் அணு உலை மூடாபட்டால் அடுத்து அது அமெரிக்கா உடனான அணு கொள்கையை கேள்வி கேட்கும்.அமெரிக்க நினைத்த இந்தியா மீதான சர்வாதிகாரம் கேள்வி கேட்கப்படும்.
இதையெல்லாம் மறைத்து, இதை பற்றிய ஒரு முழு புரிதல் இல்லாமல், மக்களின் கோபத்தை வற்ற செய்து அவர்களை பலவீனமாக்கி அரசின் வேலையை எளிதாக்கியது தான் இந்த போராட்டங்களின் உணமியான வேலை.
வால்ஸ்ட்ரிட்டில் என்ன நடக்கிறதாம், அமெரிக்க உழைக்கும் மக்களும் மத்திய வர்கமும் புரட்சிகரமாக பேசும், அடி வாங்கும், செய்தி சானல்களில் முக்கிய பிரச்சனையாக காட்டப்படும், அதன் பின் ஒரு அரசியல் இல்லை, அந்த கூட்டத்திற்கு ஒரு பொது நோக்கமில்லை, தீர்வு இல்லை, திட்டமில்லை. கோஷ்ம்போட்டு சோர்ந்து போய் கலைந்து விடும் காக்கா கூட்டமாக தான் அரசால் பார்க்கப்படும் அது தான் இந்த போராட்டங்களின் முடிவும்.
மக்களை அரசியலற்ற முறையில் திரட்டுவது அரசுக்கு மறைமுகமாக உதவி செய்வது தான். அப்படி உதவி செய்ய புரட்சிகர என் ஜி ஓக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.
அரசியலற்ற போராட்ட்ங்கள் சுரண்டப்படும் மக்களின் கோபத்திற்கான ஒரு வடிகால், எதோ நடக்க போகிறது என்ற மாயை காட்டுவது இந்த அரசியலற்ற போராட்ட்ங்களின் நோக்கம், அந்த மாயை தான் மக்களை இன்னும் சுரண்ட வழி செய்கிறது.
டிஸ்கி:
இதை பற்றி பொருமையாக விளக்கி, நிதானித்து சில கட்டுரைகளை எழுத வேண்டும். சரி ஒரு நல்ல வேலை செய்ய போகிறேன்
4 கருத்துக்கள்:
இந்த கட்டுரை முற்றுப் பெறாததால், என் கேள்விக்கு அடுத்த பதிவில் விடை வரும் என்ற எதிர்பார்ப்பில்..
நீங்கள் சொல்வது போல் அரசியலற்ற இந்த போராட்டங்கள் சுரண்டலுக்கு நடுவிலான இடைவேளை என்றால், இந்த போராட்டங்கள் என்ன ஆகா போகிறது என்பதை விடுங்கள்... இந்த போராட்டங்களுக்கான காரணங்களை என்ன செய்வது? அணு உலை பிரச்சினை ஒரு உணர்ச்சி வேகத்தில் தான் போராடுகிறோம் என்று நீங்கள் சொல்வது புரிகிறது, அப்படி என்றால் அந்த போராட்டத்திற்க்கான காரணம் சரியல்ல என்கிறீர்களா? சரி என்று கூறுவதாக தான் உங்கள் பதிவின் முதல் பகுதி சொல்கிறது... நீர்த்து போகும் என்றால், அதை நீர்த்து போகாமல் செய்ய என்ன செய்ய வேண்டும் என்ற பதிலை எதிர்பார்க்கிறேன்...
சூர்யா உணர்ச்சி வேகம் என்பது ஆரம்பத்தில் சரிதான் ஆனால் பின்னாட்களில் அந்த போராட்டம் போர்குனமிக்க போராட்டமாக மாற போராடுகிறவர்கள் ஒரு முழுமையான திட்டம், அரசியலுடன் போராட வேண்டும். உண்மையில் விரிவாக எழுத வேண்டும் என நினைக்கிறேன். இல்லை எழுதுகிறேன். நன்றி
காத்திருக்கிறேன்..
/வால்ஸ்ட்ரிட்டில் என்ன நடக்கிறதாம், அமெரிக்க உழைக்கும் மக்களும் மத்திய வர்கமும் புரட்சிகரமாக பேசும், அடி வாங்கும், செய்தி சானல்களில் முக்கிய பிரச்சனையாக காட்டப்படும், அதன் பின் ஒரு அரசியல் இல்லை, அந்த கூட்டத்திற்கு ஒரு பொது நோக்கமில்லை, தீர்வு இல்லை, திட்டமில்லை. கோஷ்ம்போட்டு சோர்ந்து போய் கலைந்து விடும் காக்கா கூட்டமாக தான் அரசால் பார்க்கப்படும் அது தான் இந்த போராட்டங்களின் முடிவும். //
இந்த நிலைபாடு வினவின் நிலைபாட்டில் இருந்து வேறுபடுகிறதே
Post a Comment