Monday, September 19, 2011

தூக்கு மேடை குறிப்புகள் – கம்யுனிஸ்டிற்க்கு வாழ்வும் புரட்சி தூக்கும் புரட்சி


சாகும் நாள் தெரிஞ்சிட்டா வாழும் நாள் நரகமாகிடும், இது யாருக்கு பொருந்துமோ இலையோ தூக்கு தண்டனை கைதிகளுக்கு பொருந்தும். மனிதாபிமான அடிப்படையில், ஒரு வேகத்தில் செய்யப்படும் குற்றங்களும், உணர்ச்சி நிலையில் செய்து விடும் தவறுகளும், செய்யாதா குற்றத்திற்காக தூக்கை அனுபவிப்பவர்களும், தூக்கு தண்டானை நாள் தெரிந்து அதை எதிர் நோக்கியிருக்கும் நிமிடங்கள் கொடுமையானது.

ஆனால் இதெல்லாம் புரட்சிகாரனக்கும், போராளிக்கும் பொருந்தாது. அவனுக்கு வாழ்வு, சாவு என அனைத்தும் புரட்சி தான். பகத் சிங் தூக்கு மேடைக்கு அழுதுகொண்டே போகவில்லை, தூக்கு மேடைக்கு போகும் முன் லெனினை படிக்கவும் தயங்கவில்லை.தூக்கு நாளை எண்ணி வருந்திக்கொண்டும் இருக்கவில்லை. அவன் மனநிலை என்ன? அவனுக்கு எப்படி மரணத்தை சந்திக்கும் தைரியம் வந்தது? அதுவும் இளமையில்? அந்த தையிரத்தை நாம் எப்படி பெறுவது? நாம் வாழும்போதே பயப்படுகிறோமே?

மரணத்தை முத்தமிடும் வீரம் பகத் சிங் என்றில்லை புரட்சிகர சக்திகளின் பொது மனநிலை. இதை இன்னும் சரியாக புரிந்துக்கொள்ளவும் மேலே கேட்ட கேள்விகளுக்கான பதிலை தேடவும் உதவும் புத்தகம் தான் “ஜூலிஸ் புசிக்கின் தூக்கு மேடை குறிப்புகள்.

ஒரு கம்யுனிஸ்ட் என்பவன் உலகம் முழுவதும் சமதர்ம வாழ்வு, மக்களின் விடுதலை எனபதை குறிக்கோளாக கொண்டும், இன்றைய அடக்கு முறை சமுதாயத்தில் அதிகாரவர்கத்தை எதிர்த்தும், அந்த அமைப்பையே மாற்ற போராடுபவன்; தான் ஒரு கம்யுனிஸ்ட், தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் பொரும்பான்மை மக்களின் நலனை எதிர்பார்ப்பவன், அதிகார வர்கத்தை சமரசமில்லாமல் எதிர்ப்பவன், போராட்டத்தை மகிழ்ச்சி என ஏற்றுக்கொண்டவன்.இடையாராது போரடுபவன்.

ஆனால் இத்தகைய சமுக மாற்றத்தையும், மக்கள் நலனையும் அவர்களை சுரண்டுவதை அனுமதிக்கும் அரசு, அதிகார வர்கம் இத்த்கைய போராளிகளை நசுக்கவே பார்க்கிறது. அவர்களின் ஓவ்வொரு செயல்பாடுகளையும் தன் வலிமையான ஊடகத்தை கொண்டு அவதூறு செய்கிறது. முடிந்தால் போலி என்கவுனடர்கள், போலி வழக்குகள் என சிறையில் அடைத்து கொடுரமாக சித்திரவதை செய்கிறது. புரட்சிகர அமைப்பயே நசுக்கிவிட தன் அறிவையும், அதிகாரத்தையும் ஆயுதத்தையும் பயன்படுத்துகிறது.

ஆனால் மார்க்ஸிய வழியில் மக்கள் நலனுக்காக போராடும் தோழர்கள் மக்கள் விடுதலைக்கான சித்தாந்தம் , அரசியல், போன்றவற்றில் நன்கு தேர்ச்சி பெற்று, அதன் மீது நம்பிக்கை வைக்கும் போது அவர்கள் இந்த் அதிகார வர்கத்தை எதிர்த்து வீசியெறியும் ஆற்றலும் மனோபலமும் பெற்றுவிடுகிறார்கள்.அவர்கள் சூழ்ச்சிகள், பொய்கள், தூரோகங்கள், வீழ்ச்சிகள் என சகலத்தையும் எதிர்த்து மீண்டு போராடும் வலிமை மிக்கவர்களாக மக்கள் முன் நிற்க்கிறார்கள். அதன் மூலம் மக்களை திரட்டுகிறார்கள். மக்களையும் இத்தகைய போராளிகளாக அரசியல்ப்படுத்துகிறார்கள்.அவர்கள் தலமையை ஏற்றுக்கொள்கிறார்கள்.இதையெல்லாம் புரிந்து கொள்ள புதிதாக போராட வருபவர்கள் தூக்கு மேடை குறிப்புகளை அவசியம் படிக்க வேண்டும்.

ஜூலிஸ் புசிக் எனும் செக் நாட்டு கம்யுனிஸ்ட்டின் மரண தண்டனையை நோக்கிய சிறை நாட்களின் குறிப்புகள் தான் “தூக்கு மேடை குறிப்புகள்அப்பொழுது அவர் எதிர்த்தது உலகின் மிக கொடுர பாசிஸ்டான ஹிட்லர் அரசை. ஹிட்லரின் ஜெர்மெனி படைகள் செக் நாட்டை கைப்பாற்றி அங்கு ஜனநாயகத்தை நசுக்கிய போது. அங்கிருந்த கம்யுனிஸ்ட் கட்சி ரகசியமாக செயல்பட்டது.அதன் ஒரு உறுப்பினர் தான் ஜூலிஸ் புசிக். தோழர்களின் தீவிர பாசிஸ எதிர்பும், அதற்க்கு அவர்கள் மேற்கொண்ட மக்கள் திரளும்,பிராச்சாரங்களும் இவர்கள் மீது பாசிஸத்தின் கோபத்தை அதிகப்படுத்தியது அதன் விளைவாக ஒரு நாள் நள்ளிரவில் ஜூலிஸ் புசிக் கைது செய்யப்படுகிறார். எந்த நேரமும் அவருக்கு மரணதண்டனை அளிக்கப்படலாம் என்ற நிலையில் அவர் சிறைக்குறிப்புகள் விரிகிறது.

கைது செய்யப்பட்ட புசிக் தங்கள் தோழர்களை காட்டிகொடுக்குமாறு கொடுமை படுத்தப்படுகிறார். ‘என்னை எவ்வளவு வேண்டுமானலும் அடி ஆனால் நான் ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன்

என உறுதியுடன் இருக்கிறார் புசிக். சிறை சித்திரவதைகள் கொடுரமாக மாறுகிறது. அவர் 5 அடி தூரம் சென்று தண்ணிர் குடிக்கவே தவழுவதற்க்கு 30 நிமிடம் ஆகும். அப்படியும் குடிக்க முடியாது தொண்டை வலிக்கும். எப்பொழுதும் ரத்த வாடை தான். சாப்பிட முடியாது, அதை அழகாக புசிக் சொல்லுவார் “ நான் உணவை கண்களால் தான் உண்டேன்என்று.ஆனால் இந்த கொடுமைகளை அவர் பொருட்ப்படுத்தாவே இல்லை, அந்த நேரத்திலும் அதிகரிகளால் தன்னிடமிருந்து ஒரு வார்த்தை வாங்க முடியவில்லை என்ற மகிழ்ச்சி தான் அவருக்கு அதிகம்.

அதிகார்கள் இந்த முறை மனதளவில் அவரின் பலத்தை பலவீனப்படுத்த முனைகிறார்கள். இத்தனை நாள் கொடுரமாக தாக்கிய அவர்கள், திடிரென அவரின் மனைவியுடன் பேச வைக்கிறார்கள், “ஏன் கொடுமைகளை அனுபவிக்கிறாய், காட்டிகொடு உன் மனைவியுடன் அமைதியான வாழ்க்கை காத்திருக்கிறது என்று சொல்லி மனைவியை சந்திக்க ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் இவரின் மனைவியும் கூட சொல்லிவிடாதீர்கள் என்கிறார். அந்த நேரத்தில் இவரின் அன்பு மனைவியின் ஆதரவு கம்யுனிஸத்தின் மீதான நம்பிக்கை இவரை மக்ழ்ச்சிகொள்ள செய்கிறது. வழக்கம் போல தான் அது அவரின் மனதை மயிரளவும் பலவீனப்படுத்தவில்லை.

சிறையில் மோசமான உணவுகள் நடுவே மாதம் ஒரே முறை மாத்திரம் மிக சுவையான உணவு கொடுக்கப்படுகிறது, இதுவும் மேலே பார்த்த சைக்காலிஜிகள் டார்ச்சர் தான், சுவையான வாழ்க்கை இருக்க இங்கு ஏன் கஷ்ட்டபடுகிறீர்கள் காட்டிகொடுத்துவிட்டு சுவையான வாழ்க்கையை பெறுங்கள் என்பது. புசிக் அந்த உணவை உண்கிறார் அவ்வளவே.

புசிக்கின் சித்தாந்தம் அது கொடுக்கும் தைரியம் மிக முக்கியமானது, அவர் இதையெல்லாம் துன்பம என பார்க்கவைல்லை. அவர் மரணத்தை கண்டும் அஞ்சவில்லை. ஏனென்றால் யாருக்கு பயனின்றி சுயநலமாய் வாழ்ந்து மறைவதைவிட ஒரு உன்னத மக்கலள் விடுதலைக்கு மரணம் அடையும் போது அவர் நாளைய மக்கள் விடுதலையில் இருப்பார். இதை புசிக் அழகாக பதிவு செய்வார் “நான் இன்று சித்தரவதைகளை சந்திக்கலாம், ஏன் மரணம் கூட அடையலாம் ஆனால் நான் மக்கள் விடுதலைக்காக போராடி மரணம் அடைகிறேன். நாளை விடுதலை பெறும் மக்களின் மகிழ்ச்சியில் நான் வாழ்ந்துக்கொண்டே இருப்பேன் என்கிறார். எவ்வளவு உன்னத வார்த்தைகள். எவ்வள்வு பெரிய மனோபலம்.

அவர் சித்திரவதை காயங்களுடன் சிறையில் கிட்த்தப்பட்டிருக்க அதை பார்த்து கலங்கும் தன் சிறை நண்பர்கள் அழுவதை பார்த்து எரிச்சிலடைகிறார். அழாதீர்கள் சந்தோஷமாகவும், உற்சாகமாக்வும் பாடல்களை பாடுங்கள், உங்கள் அனுதாப முனங்கள்களைவிட நான் அந்த எழுச்சி பாடல்களையே கேட்ட விரும்புகிறேன் என்கிறார்.

அந்த சிறையில் நாளொரு நபர் தூக்கிற்க்கு செல்கிறார்கள். எந்த நேரத்திலும் புசிக்கும் தூக்கிற்க்கு அழைத்து செல்லப்படலாம் அதை பற்றி பொருட்படுத்தாமல் வரபோகும் ரசிய புரட்சி தினத்தை கொண்டாடும் வேலைகளில் ஈடுபடுகிறார்.அதைவிட முக்க்யமாக அங்கிருக்கும் சிறை அதிகாரிகளை நட்பாக்கி, தன் சிறை குறிப்புகளை சிறுக சிறுக செக் கம்யுனிஸ்ட் கட்சிக்கு சேர்கிறார். வேறு கட்டுரைகளுக்கான குறிப்புகளை அனுப்புகிறார் அவையெல்லாம் போய் சேருகின்றனவ என உறுதிப்படுத்திக்கொள்கிறார்.

இங்கு மிக முக்கியமான செய்தி இருக்கிறது. ஒரு கம்யுனிஸ்ட் என்பவன் ஒரு வேலையை எப்படியோ செய்துமுடிக்க வேண்டும். வசதிகள் வேண்டும், இது இருந்தால் தான் செய்வேன் அது இருந்தால் தான் செய்வேன் என பிடிவாதம் பிடிக்க முடியாது. தானக்கு எந்த வசதி கிடைக்கிறதோ அதையேஎ கருவியாக மாற்றிக்கொள்ள தெரிந்திருக்க வேண்டும். அதை புசிக் அழகாக செய்வார், சிறையில் சித்திரவதையில் இருக்கிறேன் என்று காரணம் சொல்லவில்லை, சுற்றியும் சிறை அதிகார்கள் என்று நின்றுவிடவில்லை அங்கிருந்து தான் தன் குறிப்புகளை அனுப்புகிறார். அது கட்சியின் பிற தோழர்கள் தப்பிகவும், உஷாராகவும் உதவும். இதை யாரும் அவருக்கு சொல்லவில்லை. அவரே சரியாக செய்கிறார். இது தான் கம்யுனிஸ்டின் அடிப்படை பண்பு. மக்கள் நலனுக்காக சதா சிந்த்தித்து செயல்படுவது. அதை யாரும் சொல்ல அவனுக்கு வேண்டியதில்லை, இது வேண்டும் அது வேண்டும் என காத்திரக்கவும் வேண்டியதில்லை. வசதிகளுக்காக மக்கள் விடுதலையை தள்ளிப்போட முடியாது.

இந்த மனோபலம் பூசிக்கிற்கு எப்படி வந்த்து என்பதை தூக்கு மேடை குறிப்புகள் என்ற புத்த்கம் விளக்குகிறது? அது என்ன சொல்ல வருகிறது? அதன் சாரம் என்ன?

மக்கள் விடுதலை தான் இந்த உலகின் மிக உன்னத்மானது. அதற்காக போராடுபவன் அதை விஞ்ஞானபூர்வமாக அனுகியுள்ள மார்க்ஸிய சித்தாந்தின் அறிவை பெறும் போது அவன் மனோபலம் கூடுகிறது. தன் மரணம் கூட மக்கள் விடுதலைக்காக என்கிற போது மகிழ்ச்சியைடிகிறான். அந்த நேரத்திலும் மக்கள் விடுதலை பணிகளை உற்சாகமாக செய்கிறான், சாகும் நாள் தெரிந்தும் அவன் வாழ் நாள் சந்தோஷமாகவும் உற்சாகமாகுவுமே கழிகிறது. தான் இறந்தாலும் பின்னாட்களில் விடுதலை பெற்ற மக்களின் மகிழ்ச்சியில் வாழபோவதை உணருகிறான்.இது தான் மார்க்ஸிய சித்தாந்த்தின் பலம், மேன்மை.

இது தான் பகத் சிங் தூக்கின் சில நொடிகள் முன்னும் லெனினை வாசித்த செயலின் காரணம், இது தான் இந்தியா நக்சலைடுகளை ஒடுக்கிய கோர தாண்டவத்தின் பின் எழுந்த புரட்சிகர மக்கள் திரள் அமைபின் தையிரத்தின் காரணம்.

கம்யுனிஸ்ட் வாழ்வையும் புரட்சியாகவே பார்க்கிறான் சாவையும் புரட்சியாகவே பார்க்கிறான். அத்னால் தான் தற்கொலையை பற்றிய மாவோ இப்படி சொல்லுவார் “ தற்கொலை கோழைத்தனமான நிகழுவு மாத்திரமல்ல அது தனிமனிதன் ஒருவனால சமுகத்தில் சுத்ந்திரமாக வாழமுடியவில்லை என்ற கோரத்தின், சமுகத்தின் மீதான ஒரு தனி மனிதனின் விமர்சனம் சாக வேண்டுமா வாழா வேண்டுமா என்பதை விட அவையிரண்டும் மக்கள் விடுதலைகாக என்பதில் தான் அதன் உன்னதம் அடங்கியிருக்கிறது. .

3 கருத்துக்கள்:

suryajeeva said...

சாக வேண்டுமா? வாழ வேண்டுமா? என்று கேள்விகளுடன் மறைந்தே வருவது போராட வேண்டும் என்ற பதில், போராட்டத்தில் உயிர் போனால் அது போராட்டம், உயிரை போக்குவித்து போராடினால் அது கோழைத்தனம்...

சீனிவாசன் said...

சிறப்பான கட்டுரை தோழரே! வாழ்த்துக்கள்

Anonymous said...

Thalaiva,

Excellent article.. I still remember your first post was proof read by me... full of spelling mistakes...

This article is fantastic...

Vivek