Wednesday, September 14, 2011

ஆழி சூழ் உலகு – நாம் கண்டுகொள்ளாத மீனவர்களின் வாழ்க்கை


இந்த உலகின் ஆதி குடிகளிள் மிக முக்கியமானவர்கள் மலை வாழ் மக்களும், மீனவர்களும். இவர்கள் வாழ்க்கை முறை இன்றும் இயற்கையை சார்ந்து இயற்க்கை முறையில், அதன் வளர்ச்சியின் ஒரு பகுதியாக வாழ்வது தான். ஆனால் இவர்களின் உழைப்பை சுரண்டும் அரசு, இதர மக்கள் இவர்களை பற்றி கண்டுகொண்டதே இல்லை.ஆனால் இவர்களில் ஒருவரான பரதவர் எனும் மீனவர்களை பற்றிய நுட்பமான பதிவுகளுடன் பேசும் தமிழின் மிக முக்கியமான நாவல் தான் ஆழி சூழ் உலகு. இதை எழுதியவர் ஜோ டி குருஸ்.

மீன் பிடிதலை நீல புரட்சி என்றும், மீன்கள் ஏற்றுமதியில் குறிப்பிட்ட நாடுகளில் ஒன்றான இந்தியா இப்பொழுதெல்லாம் கடலை தனியாருக்கு விற்று விட்டு, ஆதிக்குடி மீனவர்களை கடலில் முதல் 10 கிமிகுள் மாத்திரம் மீன் பிடிக்க சொல்கிறது, அதை தாண்டி போனால் அவர்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை. கடலில் முதல் 10 கிமி என்பது அவர்கள் விளையட தான் உதவும். மீன்பிடிக்க அல்ல.அது அவர்களுக்கு செய்யும் துரோகம்.

நாவலின் ஆரம்பம், 1945 தொம்மாதிரியார், சூசை, கோத்ரா எனும் முன்று பேரின் சுற வேட்டையில் தொடங்குகிறது.கடலின் நடுவே திடிரென அவர்களின் மரம் ஒரு பெரிய மீனின் மீது ஏறுவதும், பின் அந்த மீன் இவர்களை கண்டுகொள்ளாமல் போவதும், அந்த நொடிகளில் பயத்துடன் அமைதியாக மூவரும் காடலை பார்பதும் நம்மை சிலிர்க்க வைக்கிறது.

இவர்களின் ஊடே 1945-1985 வரையிலான ஒரு மீனவ கிரமத்தின் வாழ்க்கையும், புறசூழல்களின் மாற்றம், அரசியல் மாற்றம் அது அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றம் இவையெல்லாம் மென்மையாக செல்லும் நதியைப்போல் பதிவு செய்யப்பட்டிருகிறது.

வரலாற்றின் மிக முக்கிய சம்பவங்களின் ஊடே இவர்கள வாழ்க்கை பெரும் மாற்றத்திற்குள்ளாகிறது. ஆமத்துறை எனும் அந்த மீனவ கிராமத்தில் ஒரு காலத்தில் காலாரா நோயினால் தன் குடும்பத்தை இழந்த பெர்னாந்து பின்னால் கொழும்பில் மிக பெரிய வணிகராகிறார். அங்கிருந்தபடி ஆமத்துறைக்கு பல நன்மைகள் செய்கிறார். ஆனால் கொழும்பில் யார் ஏது என்று தெரியாமல் மர்ம நபர்களால் கொல்லப் படுகிறார் அப்பொழுது கொழும்பில் இனக்கலவரம் ஆரம்பித்த நேரம்.பின்னாட்களில் பெரும் செல்வந்தராவன அவரின் குடும்பம் இனக்கலவரத்தில் சிதறுண்டு அவருடைய ஊமை மகன் 1960 அகதியாகவும் ஏழையாகவும் ஆமத்துறைக்கு வந்திரங்குகிறான்.

ரத்தினசாமி எனும் செல்வந்தரின் மகன் த்னுஷ்கோடி புயலில் மறைகிறான். காங்கிரஸ் முதல் திரவிட கட்சிகளின் வளர்ச்சி நுட்பமாக கதையினூடே பதிவு செய்யப்படுகிறது.

ஒருகட்டதில் மோட்டர் படகுகள் ஆம்த்துறயின் கடல் பக்கம் அதிகமான இறள்களை பிடிக்க வரும் போது லாபத்திற்க்காக அவர்கள் மீன்பிடிகையில் அவர்கள் கையாளும் முறை இறால் குஞ்சுகளை கொன்று குவிக்கிறது. அதை பற்றி கதை மாந்தர்கள் பேசும் போது, அவர்களின் மீன் பிடிக்கும் முறை விவரிக்கபட்டு அது இயற்கையை சார்ந்து அதன் வளர்ச்சியத் தடுக்காமலும் அழிக்காமலும் அதனூடே இருப்பதும், லாபத்திற்க்காக மீன் பிடிப்பவர்கள அதை சுரண்டிவிட்டு அதை முற்றிலும் அழித்துவிடுவதும் எளிமையாக புரிய வைக்க படுகிறது.

இந்தியாவில் விவசாயம் முதல் பல கணிம வளங்களை கொள்ளையடிக்க நுழையும் தனியார் அந்த மண்னின் த்னமையையும் குறுகிய காலத்தில் சுரண்டிவிட்டு அந்த மண்ணையே மலடாக்கைவிட்டு செல்வதையும் நாம் கண்டுகொளவ்தில்லை. ஒரு வருடம் மாத்திரம் கிடைப்பதில் பசுமை புரட்சி எருமை புரட்சி என பீத்திக்கோண்டு திரிகிறோம். பின்னாள் அங்கு ஒன்ருமே விளவதில்லை.

இன்னொரு பக்கம் அந்த மக்களின் இயல்பு பதியவைக்கபடுகிறது, உலகை முழுவது சூழ்ந்த இந்த கடல் நடுவில் வெறும் ஒரு மரத்துடனும், வலையுடனும் செல்லும் அவர்களின் மனோபலமும், அவர்கள் நிலத்தில் இயல்பாகவே மற்றவரைவிட சிறிது கரடுமுராடாக இருப்பதும் இயல்புதான். கடலில் அவர்கள் உணவு என்ன பாசியும், ஆமை ரத்தமும். வழி தவறி போனாலோ மரம் மாட்டிக்கொண்டாலோ சிக்கி தவிக்க வேண்டியது தான்.

காலவோட்ட்த்தில் ஒரு மீனவ கிராம வாழ்க்கையை பதிவு செய்யும் அதே நேரம் அவர்களின் சமயம் பற்றியும் புனித சவேரியரின் வாழ்க்கையை எநதவிட நெருடலும் இல்லாமல் இயல்பாக கதைமாந்தருள் சொல்லுவதும் அற்புத்மான அனுபவம். அங்கேயிருக்கும் சர்ச்களின் போலித்த்னம், சமயம் எனும் பேரில் இவர்கள் சுரண்டப்படுவது, அதே நேரம் மக்களின் வாழ்க்கையுக்கு த்ன்னை முழுவதும் அற்பணித்துக்கொண்ட காகு சாமியாரின் தியாகம். மீனவ மக்களின் காதல் காமம், அதன் முரண்பாடுகள் எல்லாம் இயல்பாக பதியப்படுகிறது.

நாவலின் இன்னொரு முக்கியமானது அவர்களின் குழு சண்டைகள் அதன் நீதிகளும். கடலில் வைத்து எதிரியை அடிக்கலாம் ஆனால் கறையில் வந்தால் அவரே விருந்தாளித்தான். ஊரில் உள்ள குழுக்கள் ஏன் எதற்கென்று தெரியாமல் வன்மமாக போரிட்டுகொள்கிறார்கள். சில நேரம் இதுவே அவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது. சிலநேரம் அதுவே இயல்பாகிறது.



ஜோ டி குருஸிற்கு இது முதல் நாவலாம் ஆங்காங்க அதன் சுவடுகள் தெரியத்தான் செய்கிறது. இயல்பான காம நிகழுவுகள் அமெச்சூர்த்னமாக விவரிக்கப்படுகிறது. சமய பிரச்சனையை இந்து பாரம்பரியத்திற்க்கு வசதியாக வளைகிறது.ஜோ டி குருஸ் இதில் முக்கிய நிகழ்வாக எடுத்துக்கொண்ட்து மரணமும் தியாகமும். ஒரு மனிதன் தான் வாழ்க்கையில் செய்யும் உன்னதம் தியாகம். காகு சாமியாரும் , கோத்ர பிள்ளையும் அதற்க்கு சாட்சியாக நம் முன்னே நிற்க்கிறார்கள்...கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய நாவல் .

3 கருத்துக்கள்:

suryajeeva said...

முதல் முறையாக மீனவர்களை பூர்வ குடிகள் என்று குறிப்பிடும் பதிவை படிக்க நேர்ந்தது.. மீனவ இனத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க பலர் போராடுவது சத்தம் எழவில்லை என்று இருந்த எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்து உள்ளது..

காந்தி பனங்கூர் said...

அருமை நண்பா. நீங்கள் அந்த நூலை எந்த அளவு நெசிச்சு வாசிச்சிருக்கீங்க என்பது உங்கள் பதிவின் மூலம் தெரிகிறது. இன்றைய நம் அரசாங்கம் நம் மீனவர்களை இலங்கையிடம் அடகு வைத்துள்ளது. நல்ல பதிவு.

Gopi Ramamoorthy said...

நல்லா எழுதி இருக்கீங்க