20 வருடங்களுக்கு மேல் மக்களை அணிதிரட்டாமல் ஆயுதத்தின் மூலம் தனி ஈழம் அமைக்க போராடிய ஒரு இயக்கம் வீழ்ந்தபின் அதே ஈழம் ஜெயலலிதா தலமையில் அமையும் என இன்ஸ்ட்டன்ட் ஈழ ஆதர்வளர்கல் என்ன சொல்ல வருகிறார்கள்? ஜெயலலிதா துப்பாக்கி தூக்க போகிறாரா? இல்லை விடுதலை புலிகள் துப்பாக்கி தூக்கியது தவறு என்றா?
ஈழத்தில் இந்தியாவும், இதர ஏகாதிபத்தியங்களும் பாஸிஸ ராஜபக்ஷேவுடன் இணைந்து நட்த்திய கோர யுத்தம் முடிவடைந்தவுடன். தமிழகத்தின் அதன் எதிர்விணையில் குறிப்பிடதக்கது, அந்த பிணங்களை ஓட்டுகளாக மாற்ற முயன்றது, இன்ஸடன்ட் ஈழ ஆதர்வாளர்கள் ஆளுக்கொரு இயக்கம் ஆரம்பித்து தலைவர்களாக தங்களை அறிவித்துக்கொண்டதும்.
சமுக விடுதலை என்றால் என்ன என்பதை பற்றி ஒரு அடிப்படை அறிவுக்கூட இல்லாதவ்ர்கள், இதுதான் என்றில்லாமல் எல்லாத்தையுமாக உளர தொடங்கினார்கள்.
பிரபாகரன் உயிருடன் உள்ளாரா மறைந்தார என்பது தொடங்கி ஒருபக்கம் குழப்பம் நீடிக்கையில் பிஜேபி தலமையில் ஆட்சி வந்தால் அது ஈழத்திற்க்கு ஆதரவாக இருந்திருக்கும் என்று ஆருடம் சொன்னார்கள். இந்திய அரசு என்றால இந்திய அரசு அதற்க்கு காங்கிரஸ் பீஜேபி, ஜனத்தள் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. இன்னும் சொல்ல போனால் பிஜேபி என்ற கட்சியின் அடிப்படையே இந்து இந்திய தேசியம், அதில் நசுங்கும் ஒரு பிரிவான தமிழினம் அதை காக்க முனையும் ஒரு கூட்டாம் பீஜேபியை ஆதரிப்பது என்ன வகை அரசியல், நியாயம் என்றே முதலில் புரியவில்லை.
மோடி முதல் தாக்கரேவை வரை தூக்கிவைத்து கொண்டாட ஆரமபித்தார்கள். ஆதிக சாதிகள் தலமையில் தமிழின இயகங்களை கட்டினார்கள். அப்படியே சென்று ஜேவுக்கு ஓட்டு போடுங்கள் என்று பச்சையாக கேட்டு பரப்புரை செய்தனர்.ஆனல் இதற்காக ஒருவரும் வெடகபடவில்லை.
இதற்கெல்லாம் மணிமகுடமே தமிழ்தேசியவாதிகளும் அரை குறை திரவிட அதுவும் பெரியார் சார்ந்த இயகங்கள் பார்பன பாஸிஸ ஜேவை தூக்கி வைத்து கொண்டாடியதும், ஜேவின் காலில் சாஷ்ட்டாங்கமாக விழுந்த்தும்.ஜெயலலிதா எப்போதுமே ஈழ தமிழர்கள் மற்றும் தமிழர்களின் நல வாழ்வை பற்றி எந்த அக்கரை கொண்டிராதவர், இப்பொழுதும் மக்கள் நடத்தியா போர்குணமிக்க போராட்டங்களின் விளைவாகவே தீர்மானம் போட்டவர்.
ஆனால் தமிழ்தேசியவாதிகளோ கொஞ்சமும் வெட்கமில்லாமல் அம்மா தலமையிலேயே ஈழம் அமையும் என்கிறார்கள் இதில் கொஞ்சம் கவனியுங்கள்.
20 வருடமாக ஆயுத போராட்டம், தேர்ந்த ராணுவத்தை கொண்டு மாதிரி தனி ஈழ அரசை நட்த்திய காட்டிய பிரபகரனால் சாதிக்க முடியாத்தை சீமானோ, ஜெயல்லிதாவோ செய்வார் என்பதே எத்த்கையா தேர்ந்த பொய்யாக இருக்க முடியும்.இதை விட ஒரு போராளி அமைப்பை கொச்சை படுத்த முடியாது ஆனால் கடைசிவரை தன்னுடன் தொடர்பில் இருந்த பிரபகரன் ஒரு வேலை ஜே தலமையில் ஈழம் மலர வேண்டும் என்று சீமானுக்கு கட்டளையிட்டாரோ? ஜே வை ஈழத்தாய் ஆக்க தான் பிரபகரன் ஆசைபட்டாரோ?
சரி அப்படி ஜே தலமையிலே என்று வைத்துக்கொள்வோம், இப்பொழுது என்ன வழிமுறை அதே ஆயுத போராட்டமா? ஆயுத போராட்டம் என்றால் ஜே துப்பாக்கி தூக்க போகிறாரா?
இல்லை இல்லை ஜே வழியில் லாபி போராட்டம் என வைத்துக்கொண்டாலும் ஜேவின் அதிகாரம் தமிழ்நாட்டிற்குள் மட்டும் தானே? ஒரு வேளை பிரதமராகி ஈழம் அமைப்பார் என வைத்துக்கொண்டாலும், ஜே பிரதமராவது மற்ற மக்களுக்கு நல்லதா? நாங்கள் மற்ற மக்களை பறி எப்பொழுது கவலைபட்டோம் என்றாலும் ஜே பிரதமாரகுவாரா?
இந்திய அரசை ஜே நிர்பந்திப்பார் என்று வைத்துக்கொண்டால் இந்திய அரசு அதன் நலன்களை தாண்டி ஒருவர் நிர்பந்த்திதால் இலங்கை அரசுக்கு எதிராக செயல்படுமா?
மக்க்ளை எவ்வளவு முட்டள்கள் என நினைத்திருந்தால், இவர்கள் பின்னால் போகுபவர்கள் ஆட்டுகுட்டிகளாக இருந்தால் இப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிட்டு அவர்கள் வெடகமில்லாமல் வெளியில் திரிய முடிகிறது, ஜேவை பாராட்டி கூட்டம் போட முடிகிறது?
சரி இன்னொரு பக்கம் பிரபகரன் துப்பாக்கி தூக்கியது தவறு அவர் அப்பொழுது ஜே தலமையை ஏற்றுகொண்டிருக்க வேண்டுமா? இதையெல்லாம் இன்ஸ்டண்ட் தமிழ்தேசியவாதிகள் விளக்கினால் சரி..
தமிழீழத்தின் போராட்ட வரலாற்றை சுருங்க பார்த்தால் மிக முக்கியமான அம்சங்கள்,
Ø சிங்களவர்கள் த்மிழர்களை இரண்டம தர குடிமக்களாக ஆக்கவும் அவர்களுக்கான பல சலுகைகளை ரத்து செய்கிறார்கள் இதனால் இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதரம் என்ற கேள்வி முதலில் எழுகிறது.
Ø தமிழர்கள் மீது இனபடுகஒலைகள் தாக்குத்ல்கள் கட்டவிழுக்கபடுகின்றன.
Ø செல்வா தலமையில் அறப்போராட்டம் நடக்கிறது.
Ø தமிழகத்தில் கைவிடப்படும் தனி தமிழ்நாடு என்பது மெல்ல மாறி சிங்களத்தில் த்னி தமிழீழம் தான் கோரிக்கையாக முன் வைக்கபடுகிறது.
Ø ஆனால் அறப்போரட்டம் என்பது சிக்கலாகி ஆயுதம் தான் சரி என ஆயுதப் போராட்ட்திற்கு இயக்கங்கள் மாறுகின்றன.
Ø அதற்க்கு இந்திய உதவி செய்கிறது
Ø மொத்த இயக்க்ங்களும் குறுக்கபட்டு அழிக்கபட்டு விடுதலை புலிகள் ஏக இயக்க்மாக மாறுகின்றனர்.
Ø இந்தியா தன் லாபத்திற்க்காக தான் போராளிகளை பயன்படுத்திகொள்கிறது என்று போராளிகளை இந்தியாவை எதிர்கின்றனர்.
Ø தென் ஆசியாவின் பிராந்திய வல்லாதிக்க போரில் இந்தியா ஆதிகம் செலுத்த முனைகிறது. இலங்கை பிரச்சணையை குழுப்புகிறது.
Ø விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக தமிழீழ மாதிரி அரசை உருவாக்குகிறார்கள்.
Ø உலக அளவிலான உலகமயமாக்க சூழலும், 9/11, ராஜிவி கொலை சூழலை தொடர்ந்து சர்வதேச ஏஎகாதிபத்தியங்கள் இலங்கைக்கு உதவ முனைகிறன
Ø இறுதி யுத்தம் இலங்கை பாஸிஸத்திற்கு வெற்றியை தந்து முடிகிறது.
Ø ஜே தலமையில் த்னி ஈழம் அமைக்கப்படும்
10 கருத்துக்கள்:
நல்ல பதிவு
உள்குத்து அருமை..
விடுதலை புலிகளை உலகிலேயே முதன் முதலில் தடை செய்த ஜெயலலிதாவை ஈழ தாய் என சொல்லி கொண்டு பிரபாகரனை இதை விட கேவலமாக யாரும் இழிவுபடுத்த முடியாது...
இவர்களுக்கு போராட்டம் என்றால் என்னவென்று தெரியாமல்... ஜெயலலிதா போன்ற பாசிஸ்டுகளை நம்பியும், ஊடங்களை நம்பியும், லாபி செய்தும்... ஈழம் வாங்கி விடலாம் என நம்பலாம்... இப்போது இவர்கள் செய்யும் அவ்வளவு வேலைகளும் 30 ஆண்டுகளாக விடுதலைக்கு போராடிய பிரபாகரனின் இழிவுபடுத்துவதாக இருக்கிறது...
உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்
http://www.tamil10.com/
நன்றி
//ஜெயலலிதா எப்போதுமே ஈழ தமிழர்கள் மற்றும் தமிழர்களின் நல வாழ்வை பற்றி எந்த அக்கரை கொண்டிராதவர்,//
இன்னும் தெளிவாக, விரிவாக ஆயாய வேண்டிய கேள்வி!
//இப்பொழுதும் மக்கள் நடத்தியா போர்குணமிக்க போராட்டங்களின் விளைவாகவே தீர்மானம் போட்டவர்//
கணிப்பு சரி இல்ல தல!
உலகமே எதிர்த்தாலும், தான் கண்ட முயலுக்கு மூணு கால்தான்னு பிடிவாதம் பிடிப்பவர் ஜெ.
இவரின் கடந்த ஆட்சியின் அரசு ஊழியர் மீது நடவடிக்கை, சாலையோர பணியாளர்களின் வேலை பறித்தல் என ஓராயிரம் உதாரணங்கள் இருக்கின்றன
ஏன் அவ்வளவு தூரம் சமீபத்திய சமச்சீர் கல்வி ஒன்றே போதும்.
அதனாலே மக்கள் போரட்டத்தை பார்த்து பயந்து தீர்மானம் போட்டார்னு சொல்றது பூனை கண்ணை மூடி பூமி இருட்டுனு சொல்றதுக்கு சமம்
கரிகாலன் சமசீர் கலவி உளபட ஏன் மூவருக்கான தீர்மானத்திலும் ஜே முதலில் என்னானல் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்தார். ஏர்கனவே சமசீர்கல்வியில் போராட்டம் மானவர்கள் கையில் சென்றால அது அரசுக்கு ஆபத்து என்பதை உணர்ந்தவர் பின்னால மூவருக்குமான தூக்கில் பல ஒன்றுபட்டு குறிப்பாக மாணவர்கள் ஒன்றுபடுவதை கருத்தில் எடுத்துக்கொண்டார். அதற்க்கு இன்னொரு காரணம் விரைவில் வரப்போகும் உள்ளாட்சி தேர்தல்... மேலும் ஜே பிடிவாததை பல மூக்குடைப்புகளுக்கு பின் அதை வாபாஸ் வாங்குவது கடந்தகால வரலாறே.. உதரணம் 40 நாடளுமன்ற தொகுதிகளில் தோற்ற பின் அவர் பிடிவாதம் பிடிக்காமல் பல சட்டங்களை வாபஸ் வாங்கினார்...
நல்ல பதிவு.சரியான கணிப்புக்களுடன் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு .வாழ்த்துக்கள்
அருமையான பதிவு. இதையும் படியுங்கள் இலங்கை தமிழர் பிரச்சினை – மூன்று முக்கிய குற்றவாளிகள்
என்ன ஜெயலலித்தா ஈழத்தாயா?
எம்மினத்தலைவரை கைதுசெய்து தமிழகம் கொண்டுவந்து தூக்கிலிட வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்
போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று அறிக்கை தந்தவர்
இலங்கை மீது பொருளாதாரத் தடைக்கொணர ஒரே ஒரு தீர்மானம் போட்டார் என்பதற்காக அவர் ஈழத்தாய், ஈழத்தை மீட்டெடுப்பர் என்று சொல்வது
ஈழத்திற்க்கும், விடுதலைப் புலிகளுக்கும், அண்ணன் பிரபாகரன், ஆயிரம் ஆயிரம் போராளிகள், முத்துக்குமரன், செங்கொடி ஆகியோரின் தியாகம் என்று அனைத்திற்கும் களங்கம் உண்டாக்கி அவற்றை அசிங்கப் படுத்தும் செயலாகும்
Post a Comment