Wednesday, August 10, 2011

உலகப்படம்: V For Vendettaவும், லண்டன் கலவரங்களும்

..A building is a symbol, as is the act of destroying it. Symbols are given power by people. A symbol, in and of itself is powerless, but with enough people behind it, blowing up a building can change the world.
- V
People Should not be afraid of their Government, Government should be afraid of their People



லண்டனில் சில நாட்களாக நடந்து வரும் கலவரங்களை பற்றி வெகுமக்கள் ஊடகங்கங்கள் கடைபிடிக்கும் அறைகுறை மவுனம் அத்ன் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஒருபக்கம் உலகம் முழுக்க ஒரு நிதிசிக்கலில் சுழும் என பயந்துபோய் இருக்கும் நேரத்தில் லண்டனில் வெடித்திருக்கும் கலவரமும், அதை தொடர்ந்த அரசின் மவுனமும் குழபத்தையே நமக்கு த்ருகின்றன.

இந்த கலவரங்கள் வெறும் அடிதடிகளா அல்லது மக்களின் எழுச்சிய? மக்களின் எழுச்சி என்றாலும் அது வெறும் அதிகார வர்கத்திற்கெதிரான வெற்று கூச்சலா? அனைத்தையும் தெரிந்துக்கொள்ள காத்திருக்கிறோம் அதுவரை..

லண்டன் கலவரங்களை தொடர்ந்து எனக்கு நியாபகம் வந்த படம் வி ஃபார் வேண்டெடா,அதை பற்றிய என் மீள்பதிவு. உண்மையில் காமிஉக்ஸாக வந்து ’அ’ராஜாகவாதத்தை ஆதரிக்கும் படம். திரைப்படமாக மாற்றும் போது ’அ’ராஜாகவாதத்தை சுத்ந்திரம் என்று மாற்றினார்கள்.




நீங்கள் மேட்ரிக்ஸ் திரைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா, சயின்ஸ் பிக்‌ஷன் படம். ஆனால் அந்த படத்தை வேறு ஒரு கண்ணோட்டதிலும் பார்க்கலாம், மேட்ரிக்ஸ் படத்தை இன்னொரு முறை இப்படி பாருங்களேன்..

திடீரென ஒருவனை ஒரு குழு தொடர்புக்கொள்ள முயற்சிக்கிறது, அவன் வாழும் உலகம், அவன் கேட்பவை, பார்ப்பவை என அனைத்தும் பொய், இன்னும் சொல்லபோனால் ஆள்பவர்களால் கட்டமைக்கபட்ட ஒரு உலகம். இதிலிருந்து உண்மையை அவனுக்கு புரிய வைத்து நிஜ உலகத்திற்கு அவனை அழைத்து செல்கிறது அந்த குழு. இந்த போலி உலகத்தை ஆள்பவர்களை எதிர்த்து அனைவரும் போராடி அதை வேரறுக்கிறார்கள்.மக்களை காப்பாற்றுகிறார்கள்.

அந்த படத்தை இயக்கிய வஜொவிஸ்கே சகோதரர்கள் தயாரித்த படம் தான் வேண்டெட்டா. இங்கிலாந்தின் மிக முக்கிய காமிக்ஸ் வீரன் இவன். காமிக்ஸ் வீரன்தான் - ஆனால் ஒட்டுமொத்த அரசியல் அதிகாரத்தை எதிர்க்க, அதை அழிக்க துடிக்கும் அரசியல் பேசும் காமிக்ஸ் வீரன்.

1600 களில் மக்களை துன்புறுத்தும் அரசுகெதிராக கலகம் செய்ய நினைத்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகர்க்க முனைந்து அதனால் அரசால் தூக்கிலடப்படுகிறார் கை ஃபக்ஸ்.
பல ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தை வலதுசாரி பாஸிஸ்டுகள் அரசு கைபற்றுகிறது, மக்களுக்கு சுதந்திரமில்லை, உரிமையில்லை அனைத்தும் அரசு கட்டுபாட்டில் தான். ஆனால் அரசோ மதத்தலைவர்களின் கையில்.

அந்த நேரத்தில் அந்த ஊரில் முளைக்கிறான் கை ஃபாக்ஸ் முகமுடி அணிந்த வீரன் வேண்டெட்டா சுருக்கமாக வி. சுதந்திரத்தையும் மக்களின் உரிமையையும் பறிக்கும் அரசை தூக்கி வீசுவது தான் அவன் கொள்கை, கோபம், ஆனால் அதை அவன் அரசுக்கெதிரான வஞ்சம் என்கிறான்.
எவி, அரசு தொலைகாட்சியில் பணிபுரிகிறாள், எல்லரையும் போல் அவளுக்கும் அரசின் மீது கோபம் இருக்கிறது, அவளின் பெற்றோர்கள் அரசுகெதிராக கலகம் செய்து அரசால் தண்டிக்கபட்டவர்கள். ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் நிலையில் தவறுதலாக வெளியே செல்கிறாள், அரசு அதிகாரிகள் அவளை தாக்க முயற்சிக்க வீ அவளை காப்பற்றுகிறான். அன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகர்க்கிறான் வி.


தப்பித்து வந்த அரசு அதிகாரிகள் மூலம் எவியை சந்தேகிகும் அரசு, அவளை கைது செய்ய தொலைகாட்சி அலுவலகம் போக, அதே நாளில் வி தொலைகாட்சியை கைபற்றி மக்களுக்கு ஒரு உரை நிகழ்த்துகிறான். ந்வம்பர் ஐந்து அன்று மக்கள் அரசை தூக்கியெறிய புரட்சி செய்ய வேண்டும் என்கிறான். மறுபுறம் எவியை அரசுக்கெதிரான போராளியாக தயார்ப்படுத்துகிறான்.

தொடர்ச்சியாக வி முன் அரசு தோற்கிறது. இதனால் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அரசை துக்கியெறிய வீதிக்கு வருகிறார்கள், அவர்கள் முன் ராணுவம் செயலற்று நிற்க பாசிசம் வீழ்த்தபடுகிறது. இந்த போராட்ட்த்தில் வி அழிக்கப்படுகிறான்.அவன் புகழ் மட்டும் மக்களிடம் அவனணிந்த முகமுடியாக நிலைக்கிறது.

வி இந்த திரைப்படத்தில் மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நிகழ்த்தும் அந்த உரை மிக முக்கியமானது. மக்களின் உரிமை, சுதந்திரத்தை பறித்து அதிகாரம் செலுத்தும் இந்த அரசை, மக்கள் எதிர்க்காமல் இருக்க காரணம் அவர்கள் மனதில் இருக்கும் பயமும், தயக்கமும். என்பதை மக்களுக்கு சுட்டிகாட்டுகிறான்.மக்கள் ஒன்று கூடி போராடினால் அரசு, அவர்கள் முன் பணியும் என்பதை மக்களுக்கு விளக்குகிறான்.

இன்னொரு பக்கம் எவியின் பயம் போக அவன் கொடுக்கும் பயிற்ச்சி மிக முக்கியமானது. ஒரு நாள் வியை தேடி போகும் எவியை கைது செய்து சிறையில் அடைக்கிறான் ஒரு அதிகாரி. சிறையில் வி-யை பற்றி த்கவல் கொடுக்க சொல்லி சித்திரவதை, எவி தளராமல் சித்திரவதையை ஏற்றுகொள்கிறாள், ஆனால் வீயை பற்றி மூச்! ஒரு வார்த்தையில்லை.

அதே நேரம் அந்த சிறையில் இதற்கு முன் இருந்த ஒரு பெண் தான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்பதால் அரசால் சித்திரவதை செய்யபடுவதை சில குறிப்புகளாக எழுதி ஒளித்து வைத்திருக்கிறாள். அவளின் அந்த போராட்ட வாழ்க்கையும், அவளின் மன உறுதியையும் பற்றி குறிப்புகளில் படிக்கும் எவி அரசின் எந்த சித்திரவதைக்கும் தயாராகிறாள். மிகுந்த மன உறுதிக்கு பின் அவள் விடுதலை செய்யப்படுகிறாள். ஆம், அத்தனை நாள் அவள் இருந்த்து வியின் வீட்டில் தான். எல்லாமே செட்டப்! அந்த சிறை பெண்ணின் குறிப்புகள் மட்டுமே உண்மை. அரசு சிறையில் ஒரு பெண் எழுதியது.இது தான் எவிக்கு மன உறுதியை சோதிக்கும் வளர்க்கும் பயிற்ச்சி.

காமிக்ஸ் உண்மையாக பேசுவது அராஜாகவாதம், அதாவது எந்த வித அதிகாரமும் த்ங்கள் மீது இருக்க கூடாது என நினைப்பது. ஆனால் திரைப்படத்தில் அது ஜனநாயகம் பேசும். சின்ன முன்னேற்றம்.

ஆனால் வழக்கம் போல் தான், எல்லாம் ஹிரோயிஸம். ஒரு த்னிநபர் வந்து தான் மக்களை காப்பாற்றி அவர்களை ஒன்று சேர்த்து, ஆளும்வர்க்கத்தை தூக்கி எறிந்துவிட்டு இறுதியில் செத்தும் போய்விடுவார். படம் முழுவதும் பேசும் அரசியல் கடைசியில் இந்த ஹீரோயிசத்தால் ஆன்மீகவாதம் ஆகிவிடுகிறது.

அதாவது கவலையில் வாடும் மக்களை காப்பாற்ற வருவான். உலக ரட்சகன் அவதார மூர்த்தி என்பது..
ஆனால் யதார்த்தம் - மக்கள் தான் திரண்டு போராட வேண்டும்!

டிஸ்கி: இந்த படத்தின் சில முக்கிய வீடியோக்கள் யுட்யுப் வழியாஅக் அப்கிர்வது தடை செய்யப்பட்டுள்ள்து (ப்ர்ர்ர்ர்ர்ர்)

1 கருத்துக்கள்:

suryajeeva said...

நல்ல கட்டுரை, இந்த கலகம் குறித்த உங்கள் பார்வையை காண காத்திருக்கிறேன்..