Tuesday, August 9, 2011

தமிழர்களே வாருங்கள்- சிங்கள பெண்களை கற்பழிப்போம்

ஆன்மீக சுற்றுலா வந்த சிங்களர்களை தாக்கிவிட்டு ஓடியதன் மூலம், தமிழ்நாட்டில் சிங்களர்கள் சுதந்திரமாக சுற்றுவதையும், ஈழத்தில் தமிழ்மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பமுடியாமல் அவதிப்படுவதையும் அம்பலபடுத்த வேண்டியதை திசை திருப்பியுள்ளனர், தமிழின வெறியர்கள்

சென்னையில் ஆன்மிகா சுற்றுல வந்த சில சிங்களர்கள், சிங்கள எழுத்து பொதித்த ஆடைகளுடன் திரிய, உடனே அங்கு வந்த நாம் தமிழர் கட்சியின் ஆட்கள் அவர்களை தாக்கி அந்த ஆடைகளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர், ஆனால் பின்பு அங்கிருந்து ஓடிவிட்டனர். தலைமறைவான அவர்களை போலிஸ் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளது.

இதனை தொடர்ந்து இருவேறு கருத்துக்கள் விவாதப்பொருளாகியுள்ளது, முதலாவது - இந்த தாக்குதலை ஒரு விடுதலை போராட்டதின் மறு வடிவாமாக ஊதி பெரிதாக்கும் வேலையை, இன்ஸ்டண்ட் ஈழ ஆதர்வாளர்களும், அம்மாவின் தலமையில் ஈழத்தை பெற துடிக்கும் வீரர்கள் கொண்டாடுகிறார்கள். இன்னொரு பக்கம் அவா பாவம், அடிகாதிங்கோ, திட்டாதிங்கோ, அஹிம்சாவழியில் போங்கோ. சிங்களனை சிங்கிலாக தமிழ்நாட்டில் வாழவிடுங்கள் என்று கையெடுத்து கும்மிடுகிறார்கள்.

ஆனால், உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும் என்பது இதில் ஒளிந்துக்கொண்டுள்ளது முரண். சிங்களர்கள் இன்னும் த்மிழ்நாட்டில் இந்திய அரசு ஆதரவுடன் சுத்ந்திரமாக சுற்றவும், கல்வி கற்கவும் முடிகிற அதே நேரத்தில் இலங்கையில் முகாம்களில் த்மிழர்கள் அடைக்கப்பட்டிருக்கும் அவலத்தை, போராடி அமபலத்த வேண்டியதை விட்டுவிட்டு, அவசர கதியில் அடித்து எரித்து பிரச்சனையை ஏதோ சட்ட ஓழுங்கு, தீவிரவாத செயல் என்பது போல திசை திருப்பியுள்ளனர் நாம் தமிழர் இயக்கத்தினர்.இதில் பெருமை வேறு..

ஆத்திரம் என்பது அரசியலில்லாமல், தன்னை முன்னிறுத்தி, உணர்ச்சியின் அடிப்படையில் மட்டும் வந்த்தாலும், ஏற்க்கனவே தாங்கள் கொண்டுள்ள உண்மையான “மக்களை புறக்கணிக்கும்கொள்கையில் ஊறிவிட்டதாலும். தனி நபர் சாகசமாக, நான்கைந்து பேர் போய் அடித்து, எரித்து ஏதோ பெரிய நிகழ்வை நிக்ழ்த்திவிட்டாதாக பூரித்து... அதன் பின் தான் அம்மா ஆட்சியென்றாலும் அதுவும் இந்திய வல்லாதிக்க அரசின் கீழ் தான்; அம்மா அதை எதிர்க்க மாட்டார் என்ற உணமை உறைத்தப்பின் அங்கிருந்து ஓடி ஒளிந்துக்கொண்டனர்.

இந்த இனவெறி தாக்குத்லை இணையத்தில் ஏதோ புரட்சி நிகழ்ந்துவிட்ட்து போல் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். மீறினால் ஈழத்தில் கொலை செய்தார்கள், கற்பழித்தார்கள் நாங்கள் அதற்க்கு பதிலடிக்கொடுக்கிறோம் என்று பிதற்றுகிறார்கள்.

அய்யா அங்கே சாமி கும்பிட வந்தவர்களை அடித்தீர்களே அவர்கள் மீண்டும் இலங்கை போய்விடுவார்கள். அவர்கள் தங்கியிருந்த ஏரியா பக்கத்திலேயே தான் சிங்கள அரசு அலுவலகங்கள் இருக்கின்றன, அங்கே சிங்களர்கள் தான் இருக்கிறார்கள் அதுவும் தமிழின அழிப்பை ஆதிரிக்கும் சிங்கள நல அதிகாரிகள். இந்தியாவின் தலைநகரில் உள்ளனர் அங்கே இருப்பவர்களை ஏன் நீங்கள் தாக்கவில்லை? தாக்குவதில்லை?

ஏன் மற்ற சிங்கள ஆதரவு இடங்களில் வெளியே நின்று கோஷம் போட்டுவிட்டு கருப்புக்கொடியை காட்டுகிறீர்கள், போட்டு தாக்க வேண்டியது தானே? இழுத்து எரிக்க வேண்டியது தானே? யார் உங்களை தடுத்தது ? எது உங்களை தடுத்தது? உங்களைவிட பலவீனமானவர்கள் என்று தெரிந்தபின் தான் இன அழிப்பு நியாபகம் வந்து இந்த சுறுலா வந்த்வர்களை தாக்கினீர்கள்?

ஈழத்தில் கொலை செய்தான், கற்பழித்தான் அதற்க்கு நீங்கள் சொல்லும் தீர்வு என்ன?

தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சிங்களர்களை கொல்ல வேண்டுமா?

தமிழர்கள் கூடி சிங்கள பெண்களை கற்ப்பழிக்க வேண்டுமா?

தமிழர்கள் இனவெறி பிடித்து கொலை வெறியுடன் ரத்தம் குடித்து அலைய வேண்டுமா?

இப்படி கேள்விகள் கேட்டால் “த்மிழின துரோகி பட்டம் “ ரெடியாகிவிடும்.

உண்மையில் சிங்களர்கள் வந்த அந்த இட்த்தில் என்ன செய்திருக்க வேண்டும். ஒரு போராட்டம் நடத்தியிருக்க வேண்டாமா? அங்கே சுற்றியுள்ள மக்களிடமாவது இங்கே சிங்களர்கள் சுத்ந்திரமாக் வருகிறார்கள் ஆனால் ஈழத்தில் இன்னும் முகாம்களிலும் முள்வேளியிலும் அடைக்கபட்டுள்ளார்கள்என்று பிராச்சாரம் செய்திருக்க வேண்டாமா? அந்த பிரச்சாரத்தை அரசுக்கு எடுத்துசென்றல்லவா தடை வாங்கியிருக்க வேண்டும். மாறாக அங்கே ஒரு தேவையற்ற வன்முறையை நிகழ்த்தி, குறைந்தபட்டசம் அதை பற்றிய ஒரு தகவலும் சொல்லாமல் ஓடி ஒளிந்துவிட்டு.. பின்பு போலிஸ் ஏதோ கேஸ் போட்டு, ஏதோ அவர்கள் பாவம் நீங்கள் குற்றவாளிகள் என்பது போல் பிரச்சணையை சுருக்கி திசை திருப்பிவிட்டாயிற்று மகிழ்ச்சியா?

அரசியல்படுத்தபட்ட மக்களையும், அவர்களின் போராட்டத்தையும் எதிரிகள் அழிக்க முனையும் போது எடுக்கப்படும் ஆயுதம் தான் துப்பாக்க்கியும், வெடிகுண்டுகளூம். அதுவும் அந்த போராட்டத்தை காப்பாற்ற தான் ராணுவம். நேரடியாக மக்களை துண்டித்துவிட்டு, நாலு பேர் போய் சண்டைபோட்டு பெறுவதல்ல விடுதலை.அதற்கல்ல ராணுவம், அந்த ஆயுத்தை எதிரியும் தீர்மானிப்பதில்லை. அது மக்களை நம்பாத ஹீ(நீ)ரோக்கள் தீர்மானிப்பது.

இனவெறியில் ஒரு வேலை மக்களை அடக்கி திரண்டுவிட்டாதாக கணக்கு காட்டிவிடலாம் ஆனால் அதன் பொருட்டு அமைவது தமிழ் மக்களையே ஒடுக்கும் பாஸிஸமாக தான் இருக்கும்..அது பாஸிஸம் என்பத்ற்க்கான் அறிகுறிகள் இப்பொழுது ஈழப்பிரச்சணையை பற்றி பேசுகிறவர்களை வைத்து உறுதியுமாகிறது..

4 கருத்துக்கள்:

Anonymous said...

..\\ ”இங்கே சிங்களர்கள் சுத்ந்திரமாக் வருகிறார்கள் ஆனால் ஈழத்தில் இன்னும் முகாம்களிலும் முள்வேளியிலும் அடைக்கபட்டுள்ளார்கள்” என்று பிராச்சாரம் செய்திருக்க வேண்டாமா...\\

அட 60 ஆண்டுகளாக இது தானே நடந்து கொண்டிருக்கிறது. இர்டு ஆண்டுகளாக இதைத்தானே நாம் செய்து கொண்டிருந்தோம். யாராவது கண்டு கொண்டார்களா?அதன் பின்னும் தமிழன் நிம்மதியாக வாழ்ந்தானா? இத்தனை பாரிய இனவழிப்பு நடைபெற்றது, எவராவது கவலைப்பட்டார்களா? இன்று இனவெறியன் சிங்களவனைத் தாக்கியதற்கு தூக்கிப்பிடித்துக் கொண்டு வரும் இந்த பதிவரின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அடி உதவுவதைப் போல அண்ணன் தம்பி கூட உதவமாட்டான். வடகிழக்கில் வந்து பார்த்தால் தெரியும் தமிழர்களின் அவல வாழ்வு. உள்நோக்கத்துடன் அலட்டும் இப்படிப்பட்ட பதிவுகள் எமக்குத் தேவையா.

ndpfront said...

சிங்களச் சுற்றுலாப் பயணிகள் மீதான இனவெறித் தாக்குதல்

தமிழகத்தின் அரசியல் அமைப்பொன்றின் உறுப்பினர்கள் அம் மாநிலத்துக்குச் சுற்றுலாப்பயணமாகச் சென்றிருந்த சிங்களப் பொதுமக்கள் மீது இனவெறித் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி ஆழ்ந்த மனவருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

சிங்கள மக்களுக்கு தங்குமிடங்களை வழங்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து “நாம் தமிழர்” அமைப்பு நடத்தியுள்ள ஆர்ப்பாட்டமும், தொடர்ச்சியாக சிங்கள மக்கள் மீது அவர்கள் பயன்படுத்திவரும் இனவாதச் சொற் பயன்பாடும் கண்டிக்கத்தக்கத்து.

இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாகவும், முழு இலங்கை மக்களதும் நல்வாழ்வுக்கான போராட்டத்திலும் அக்கறை கொண்டுள்ள எமக்கு இச்செய்தி அருவருப்பூட்டுவதுடன் இலங்கையின் அரசியல் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் என்பது, இலங்கை சிங்கள பவுத்த மக்களுக்கே சொந்தமானதென்றும் மற்றைய தேசிய இனங்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்றும் வலியுறுத்திவரும் சிங்கள பவுத்த பேரினவாத சக்திகளுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

பேரினவாத சக்திகளோடு உடன்பட்டுக்கொண்டு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை அரச இயந்திரத்தின் மூலம் செய்துவரும் ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

இன்றுவரை தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் நியாயமான அதிகாரப் பகிர்வையும் அரசியல் தீர்வையும் வழங்க மறுத்து இழுத்தடித்துவரும் அரசாங்கங்களுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

தமிழ் -சிங்கள முரண்பாட்டை ஊதிப்பெருக்கி சாதாரண மக்களை வதைத்தபடி தமது நலன்களுக்காக இலங்கையில் தலையிட நினைக்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

தமிழ் மக்களது அரசியற் கோரிக்கைகள் ஒருபோதுமே சிங்களப் பொதுமக்களுக்கு எதிரானதாக இருக்கக்கூடாது.

ஆனால் வருத்தமளிக்கும் விதமாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தை சிங்கள மக்களுக்கு எதிரானதாகவும் சிங்கள மக்கள் மீதான வன்முறையாகவும் தடம் மாற்றிக்கொண்டுபோகும் குறுகிய இனவாதக் கண்ணோட்டத்தையே பல்வேறு தமிழர் அமைப்புக்கள் கொண்டிருந்தன, கொண்டிருக்கின்றன.

இலங்கைப்பிரச்சினையை சரியாகப் புரிந்துகொள்ளாமல் வெறும் வாய்ப்பேச்சும் உணர்ச்சிவசப்படுதலும் நிரம்பியதாக உரிமைப்போராட்டத்தை மாற்றி அதனைக் கேலிக்குரியதாக மாற்றுகின்றன.

இது இனப்பகையை மேலும் மேலும் தூண்டுவதன் மூலம் . மக்களுக்கு எதிரான சக்திகளுக்கு நன்மை செய்வதாக மாறிப்போகும்.

இத்தகைய அமைப்புக்களை இனம்கண்டு புறக்கணிக்கவும் தோற்கடிக்கவும் தமிழ் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.

சிங்கள பவுத்த பேரினவாத சக்திகளைப் புறக்கணிக்கும் சிங்கள மக்களோடு, இந்த நாட்டின் அனைத்துமக்களும் சமமான அதிகாரங்களோடும் சம வாய்ப்போடும் வாழவேண்டும் என்று நேர்மையாக விரும்புகிற சிங்கள மக்களோடு இணைந்து போராட முயற்சி செய்யவேண்டும்.

இத்தகையை போராட்டமானது இலங்கையில் வாழும் அனைத்து மக்களதும் நல்வாழ்வுக்கானதாக அமையும். கொள்ளைக்கார உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளைத் தோற்கடித்து இலங்கையர்களுக்கு சிறப்பான எதிர்காலம் ஒன்றினை அமைத்துக்கொடுக்கும்.

சிங்கள மக்கள் மீது தமிழகத்தில் இடம்பெற்ற இனவெறி கொண்ட வன்முறைகளுக்காக தமிழர் என்ற அடிப்படையில் சிங்கள மக்களிடம் மன்னிப்பைக் கோருகிறோம்.

சின்னதூரல் said...

தலைப்பே அற்புதம்.............