Friday, July 29, 2011

தமிழ்தேசியவாதிகளின் கருத்தை எதிர்க்கும் சேகுவாரா..

இந்த உலகில் இப்பொதைக்கு போராளி என்றவுடனே நம் நினைவுக்கு வரும் முக்கியப் போராளிகளில் ஒருவர் சேகுவாரா.சேகுவராவின் போராட்ட முறையில் எனக்கு மாற்று கருத்துண்டு.இன்று சேகுவாரா டிஷ்ர்ட்டுகளில் முறைப்பார். ஆனால் சேகுவரவின் ஒரு முக்கிய கருத்து என்னை மிகவும் கவர்ந்தது.

சே அர்ஜெண்டினாவில் பிறந்தவர், அங்கு புரட்சியில் ஈடுபட்டு மெக்ஸிக்கோ ஓடி பின் பிடல் காஸ்ட்ரோவின் அறிமுகம் கிடைத்து, பின்பு க்யுபா விடுதலைக்கு போராடி, வெற்றி பெற்று அமைச்சரானார். ஆனால் இங்கு மிக முக்கியமானது. அமைச்சர் சே பொட்டி படுக்கை கட்டிகொண்டு பொலிவியா சென்றது. அந்த மக்களுக்காக போராட, இறுதியில் பொலிவியாவில் வஞ்சக முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சேவின் போராட்ட முறை ஹீரோயிசம் சார்ந்த்து. அத்னால் அவரை கம்யுனிஸ சிந்த்னையில் நேர்மையான ஒரு ஏகத்திபத்திய எதிர்பாளராகவும், மக்கள் விடுதலை நினைத்த உண்ர்வுமிகுந்த போராளியாகவும் மதிக்கலாம் ஆனால் நான் அவரை மதிக்க இன்னொரு காரணம் இருக்கிறது. அர்ஜெண்டினா, க்யுபா, காங்கோ, பொலிவியா ஒரு வேலை உயிரோடு இருந்திருந்தால் இந்தியா, இலங்கை கூட வ்ந்திருப்பார் அந்த சர்வதேசியதன்மை தான்.

மார்க்ஸியம் மூன்றை கருத்தில் கொள்கிறது, மனிதன், சமுகம், இயற்க்கை. ஆதிக்கம்- அடிமை வர்கமாக காலம் காலமாக வழும் மனிதன், அவன் சமுகம், முதலாளித்துவ உள்முரண்பாடுகளை பயன்படுத்தி, உழைக்கும் வர்கம் அதிகாரத்தை பிடிக்கும் பின்பு, த்னக்குள்ளான வர்கத்தை ஒழித்து பொதுவுடமை சமுகமாக இயற்கையுடன் மட்டும் முரண்படும். அந்த பொதுவுடமை சமுகம் என்பது ஒரு குறிப்பிட்ட மனித்ன், ஒரு குறிபிட்ட சமுகம் என்றில்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. அத்னால் மார்க்ஸியவாதிகள் நீண்ட கால செயல்திட்டமான கம்யுனிஸ சமுகம் என்ற அடிப்படையில் சர்வதேசியவாதிகளாக இருப்பார்கள். இந்த ஒரு கூறு சேகுவாரவிடம் நாம் காணாலாம்.அவர் போராட்ட முறையில் மக்களை புறக்கணித்ததை விமர்சிக்க்லாமே ஒழியா அவ்ர் உலக மக்களின் துன்பத்தை பொதுவாக தன் துன்பமாக தான் பார்த்தார்.அது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

உலக கம்யுனிஸ வரலாற்றில் இத்தகயை சர்வதேசியவாதிகள் ஆற்றிய செம்பணி நினவுக்கூறத்தக்கது. உலகின் எந்த ஒரு மனிதனையுமே இடம், இனம், சாதி, மதம் ,மொழி கடந்து மனித்னாக பார்க்கும் ஒருவர் தான் நேர்மையான போராளியாக இருக்க முடியும்.

என் வீடு, என் குடும்பம், நான், என் சுகம் போன்ற சுயநலவாதிகள் எப்படி சமுகத்தின் உழைப்பை உறிஞ்சி, அவர்கள் நலன் பார்த்து சந்தர்பவாதியாகவும், சுயநல கருமியாகவும், பொதுநலன் மறுத்து வாழ்ந்து அழுகி சாகிறார்களோ அதன் நீட்சி தான் என் மதம் , என் இனம், என் தேசம், என் மொழி என்று உலக சமுகத்தில் இருந்து சுருக்கி கொள்பவர்களும். நிற்க, இந்த என் இனம், என் தேசம், என மொழி கோஷ்ட்டி உலகில் பொதுவாக இருக்கும் விஷம் கொண்ட கோஷ்ட்டி, இதை நான் மறுக்கவில்லை.

க்யுபாவிற்கு சுதந்திரம் வந்தாயிற்று அடுத்த என்னவென்று கேட்டால் சே பொலிவியா என்பான். ரஷியாவில் சோஷலிசம் வந்தாயிற்று அடுத்த என்னவென்று கேட்டால் ஸ்டாலின் உலக நாடுகள் என்பான். ஆனால் தமிழ்தேசியவாதிகளிடம் கேட்டால்? அவனவ்ன் நாட்டில் அடுத்த கட்ட வேலைகள் இருக்க் தான் செய்யும் நான் சொல்ல வருவது, உலக சமுகத்தை ஒதுக்கி, அதன் அவலங்களுக்கு குரல் கொடுக்காமல், உலகில் ஒடுக்கபட்டவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுக்காமல் சுயநலமாய் ஒரு சமுகத்திற்காக மட்டும், அந்த சமுகம் மட்டும் முன்னேற பாடுபடுபவனின் அலட்ச்சியம் மற்றும் மக்கள் விரோதத்தை பற்றி தான் கேள்வி கேட்கிறேன்.பின்பு அவன் சமுகம் அவதிபடும் பொழுது அனாதையாக தான் நிற்பான்.

நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கு யாரும் அடிமை இல்லை என்றார் அம்பேத்கார், ஆனால் தமிழ் மொழி வெறியர்களோ, தமிழ் உலக மொழிகளில் சிறந்தது, தனித்து என்று பார்பனீயம் பேசி வருகிறார்கள். நாம் த்மிழ் மொழி பேசுவதால் யாருக்கும் தாழ்ந்தவனில்லை, அதே நேரம் எந்த மொழி பேசுபவரை விடவும் உயர்ந்த்வனில்லை என்பது தான் நேர்மையான் மனிதனுக்குறிய நல்ல கருத்தாகும்.

ஹிந்தி எதிர்பின் வரலாறு கூட அதை திணித்த அதிகாரத்தின் சூழ்ச்சிக்கு எதிரானது. ஹிந்தி படிப்பவன் சாதரணமாகவும், ஹிந்தி தெரியாவதம் மேலும் ஒரு பாடம் படிக்க வேண்டும்,. சமுஸ்கிரத்ம் தெரிந்த பார்பன பிள்ளைகள் ஹிந்தியில் எளிதாக தேரிவிடும் தெரியாத த்மிழ் பிள்ளைகள் தோல்வியடைவார்கள் என்ற குறுகிய எண்ணத்தில் கொண்டு வந்த சட்ட்த்தை எதிர்த்தது. பொது மொழியாக ஹிந்தியை தேர்தெடுப்பதை விட ஆங்கிலத்தை தெர்ந்தெடுதிருக்கிறோம். த்மிழ் பேசுபவர்களை கேலியாக பார்த்த போது அதன் வரலாற்று சிறப்பு தன்மைகளை சொல்ல வேண்டிய நிர்பந்தம் வந்த்தே ஒழிய, தமிழ் பேசாத மக்களை விட தமிழ் பேசுபவர்கள் உயர்ந்த்வர்கள் என்ற பார்ப்பன கருத்தை விதைக்க அல்ல. மொழி போராட்ட தியாகிகளைதயவு செய்து பார்ப்பனிய கூட்டமாக்கிவிடாதீற்கள்.

உலகம் முழுவதும் மனித சமுகம ஆதிக்கம் அடிமை சமுகம் என்ற பொது கருத்தோட்டதில் தான் இருக்கிறது. வேறு வேறு காரணம் இருக்கலாம், இனம், மொழி கலாச்சாரம், நிறம், வர்கம், சாதி ஆனால் பொதுவில் இந்த ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு அடிமைகள் ஆள வேண்டும். நாம் இருக்கும் இடத்தில் எந்த வித அடிமை தனம் இருந்தாலும் போராடா வேண்டும், ஏனென்றால் நமக்கு பவுதிக எல்லை என்று ஒன்றுள்ளது. இந்த உடல், கருவிகள் வைத்துக்கொண்டு குறிபிட்ட இடத்தில் தான் போராட முடியும். செயல் தந்திரம் என்ற அடிப்படையிலும் வறையறைக்குள் வேலை செய்வது தான் நலம். ஆனால் கருத்தில் முழு மனித சமுக விடுதலை என்ற நினைவு இருக்க வேண்டும் அது தான் நேர்மையானது.அதற்காக குரல் கொடுக்கவும் த்யங்க கூடாது.

பாவம் ஆப்ரிக்கவில் வாழும் அடிமை, தமிழின எதிரியா? காஷ்மீரியும், பஞ்சாபியும் தமிழின எதிரியா? நேபாளத்தில் மன்னராட்சியில் நசுங்கியவனும், டீ எஸ்டேட்களில், சுரங்ககளில் சாகுபவனும் தமிழனின் எதிரியா.பாலஸ்தீனத்தில் போராடுபவனும், தென் அமெரிக்காவில் சிதைபவனும், விதர்பாவில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயியும், தமிழினத்தை நசுக்க பார்பவர்களா? அல்லது நசுங்குபவர்களா?

தமிழ்நாட்டை தாண்டி, பார்பனியா பாஸிஸத்தாலும், முதலாளித்துவ கொடுங்கோன்மையினாலும், மதப் பிஸாஸுகளிடம் சிக்கி தவிக்கும் மக்கள் தமிழின எதிரி என்று அவர்களுக்கெதிராக இங்கும் கொஞ்ச நஞ்ச இளைஞர்களின் மனதில் நஞ்சை கலக்கும், தமிழ் தேசிய தாக்கரேக்களும், மோடி மஸ்தான்களும் தான் உண்மையான மனித விரோதிகள்.

தெற்கு சூடான் விடுதலையை ரசிப்பார்களாம், ஆனால் தெற்கு சூடான் மக்கள் தமிழினத்திற்கு விரோதியாம். இன்று தெற்கு சூடான் விடுதலை பற்றி பேசும் ஒரு தமிழ் தேசியாவதியாவது தன் நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும், கடந்தகாலங்களில் அவர்கள் தெற்கு சூடான் போராட்டதை பற்றியோ அங்கு போராடும் அமைப்புகள் பற்றியோ, அவர்களுக்கோ ஒரு ஆதரவு, வாழ்த்து செய்தி, அவர்கள் கொலைகளுக்கான ஒரு கண்டனத்தை வெளியிட்டிருப்பர்களா? இன்று அந்த நாடு அமைந்தவுடன் கூச்சமின்றி கொண்டாடுகிறார்கள். இப்பொழுதும் திருந்துவதாக இல்லை.

இந்தியா வல்லாதிக்கத்திடமும், இந்து பாஸிஸத்திடமும் தமிழர்களை விட அதிகமாக பாதிக்கபடும் காஷ்மிரிகள், கிழக்கில் உள்ள பழுகுடியினர், பஞ்சாபிகள், ஆந்திர தெலுங்கானா விவாசயிகள் என்று இவர்களை ஒன்று படுத்தவும் ,அவர்களுக்காக குரல் கொடுக்கவோ, அவர்களுடன் ஒரு ஐக்கிய முன்னனி ஏற்படுத்துவதன் மூலம் நம் பலத்தை பெருக்கிகொள்ளலாம் என்று சொன்னால் ‘இந்தியா தேசம்பேசுகிறார்கள் என்று ஒரு துரோகிபட்டம் தயாராக இருக்கும். ஆனால் மாறாக காஷ்மீரிகளோ, தெலுங்கானா மாவொயிஸ்டுகளோ தமிழீழத்தை ஆதரித்து பேசியதெல்லாம் இப்பொழுது தான் இவர்கள் காதில் கேட்க ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் இந்த ஐக்கிய முன்னனியை நம்பியவர்கள். போராட்ட முறை, எதிரி, போன்றவற்றில் வித்தியாசம் இருந்தாலும் போராளிகள் ஒன்றுபட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. அதே நேரம் அவர்கள் கை நீட்டி ..நீட்டி வலித்து தான் பின்பு கையை மடக்கிகொண்டவர்கள்.

1991 உலகமயமாக்களுக்கு பின் உலக நாடுகளின் முதலாளிகள் சந்தை வேண்டி ஒன்று கூடியதும், ஏகத்திபத்தியங்கள் நாடு அளவில் சுரண்டுவதை நிறுத்தி அதன் அகோர பசிக்கு உலக அளவில் சுரண்டுவதையும், இந்தியாவின் பொருளாதார, ராணுவம் ஏகத்திபத்தியமாக மாறி இந்தியாமுழுவதும் மையப்படுத்தபட்டதும், நாம் நினைத்தோ, மக்கள் நினைத்தோ நடந்ததல்ல, அது ஏகாதிபத்தியத்தின் தன்மை, அதனை விரிவாக்கிகொண்டது.

எதிரி தான் நம் போரட்ட முறையையும், ஆயுதத்தையும் தீர்மானிக்கிறான், இப்பொழுது அவன் தீர்மானித்துவிட்டான், சர்வதேசிய ஏகாதிபத்திய ராணுவம், பொருளாதாரம், சந்தை. அவனை எதிர்த்து போராட வேண்டியவர்கள் இந்த சர்வதேச தனமையில் இருந்து சுருங்கி மொழி, இனம், இடம், தேசம், நிறம் என்று பிரிந்தால், இவர்களுக்குள் ஒரு ஐக்கிய முன்னனி இல்லை என்றால் அது யாருக்கு பயன் எதிரிக்கு தான். ஊதி தள்ளிவிட்டு போய்விடுவான்.

சர்வதேசியத்தை நாம் முடிவு செய்யவில்லை எதிரி தீர்மானித்திருக்கிறான். அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி வந்தால் இந்தியாவும், சீனாவும் குலுங்குவதை நாம் முடிவு செய்யவில்லை. இலங்கயில் போர் என்றவுடன் சர்வதேச படைகள் குவிந்ததை நாம் முடிவு செய்யவில்லை. லிபியாவில் முதலாளிகளின் படை ஆட்டம் ஆடும்பொழுது ஐநா அமெரிக்கா கைப்பாவையாக வேடிக்கை பார்ப்பதை நாம் முடிவு செய்யவில்லை.

சொல்லுங்கள் தமிழ் தேசியவதிகளே நீங்கள் விரும்பும் தமிழ் இன விடுதலை என்பது கூட இன்னும் சரவதேசத்தைப் புறக்கணித்துவிடுவதின் மூலம் பெற்று விட முடியுமா?

சர்வதேசத்துடன் கூட்டணி என்றவுடன் யாருடன் கூட்டணி சேர போகிறீர்கள்? ஏகாதிபத்தியத்தின் காலை நக்கியவாது தமிழ் தேசம் வாங்க போகிறீர்களா? இல்லை அதை எதிர்த்து போராடும் உழைக்கும் வர்கத்துடன் இணைந்து போராடா போகிறீர்களா?

இனியாவது பாசிசா ஜேவுக்கும், ராஜபக்‌ஷேவுக்கும் வித்தியாசம் தெரியுமா?

இல்லை தமிழக மக்களை புதைத்தாவது ஈழம் பெற்றால் போதுமா? எனென்றால் பொதுவாக ஈழம் பேசுகிறார்வர்கள் அம்மாவின் டெஸ்ட் மேட்சானா சமச்சீர் கல்வியில் தகிடுதன்ங்களில் மூச். அதை விட கொடுமை அம்மாவுக்கு அதிலும் ஜால்ரா போடுவது..

இன்னும் நம்பிக்கை வைத்து உங்களிடமெல்லாம் சர்வதேச அரசியல் பற்றி பேசுகிறேன், உங்கள் சுயநலத்தை விட்டுக்கொடுக்கவில்லை என்றால்.......

0 கருத்துக்கள்: