Tuesday, May 31, 2011

தெருவிளக்கில் படித்த மாணவனுக்காக வெட்கபடாத சமுகம்


ஒவ்வொரு முறை பத்தாவது மற்றும் ப்ளஸ்டு தேர்வு முடிவுகள் வந்தவுடன் சொல்லிவைத்ததுப் போல் பத்திரிக்கைகள் ஒரு டெம்ப்ளேட் செய்தியை, அதாவது தெருவிளக்கில் படித்து முதலாவதாக வந்த ஏழை மாணவன்”, “வீடு வேலை செய்து முதல் மதிபெண் எடுத்த மாணவி”, என்பதாக வேலை செய்தபடியே படித்தவர்கள், ஏழ்மையில் படித்தவர்கள் பற்றிய செய்திகளை இயல்பாக பார்க்கலாம். பின்னாட்களில் வார இதழ்களில் இவர்களை பற்றிய பெருமித கதை சொல்லும் பேட்டிகளும்,கட்டுரைகளும் வரும்.

ஒவ்வொரு ஆண்டும் தொடரும் இந்த கூத்தின் பின்ன்னியில், கிடைத்த வாய்ப்பில் உழைப்பை செலுத்தி வெற்றிம் பெற்ற அந்த மாணவர்கள் பாராட்டுக்குறியவர்கள் தான் அதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை.ஆனால் அந்த மாணவர்கள் அப்படி துன்பப்படுவதையும் வரும் காலத்தில் யாரும் அப்படி துன்பப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக நாம் செய்கிறோமா?

ஒரு மாணவனோ, மாணவியோ படிக்கும் காலத்தில் வேலை செய்வது இழிவானதல்லா மாறாக வரவேற்கப்பட வேண்டியது.ஹார்லிக்ஸ் குழந்தைகளாக ஒரு வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது நல்ல எண்ணம் தான். ஆனால் யதார்தத்தில் சிறுவர்களுக்கு “மதிபெண் அடிப்படையில் போதிக்கும் கல்வியைவிட சமுக உணர்வையும், மனிதாபிமானத்தையும், ஒழுகத்தையும் சமுக வேலைகள் தான் கற்றுகொடுகின்றன. அதனால் 9வது வகுப்புக்கு மேல் பகுதி நேரமகவோ அல்லது விடுமுறை நாட்களிலோ வேலை செய்வது சமுக அவசியம்.

போடும் சட்டையிலும், குடிக்கும் கோக்கிலும் அமெரிக்க கனவையும், அமெரிக்க வாழ்க்கையையும் வாழும் இந்திய இளைஞன் சொல்லி வைத்தார்போல் தவிற்கும் ஒரு விடயம் அமெரிக்க இளைஞர்களின் வாழ்க்கைமுறை. அங்கு நடுத்தர மற்றும் ஏழை இளைஞர்கள் படிக்கும் போது பகுதிநேர வேலை செய்வதை பெற்றோர்களே ஊக்குவிக்கின்றனர். ஆனால் நாம்?

சரி வேலை கதைகள் ஒருபக்கம் இருகட்டும், விளக்கின் கீழ் படிப்பது வசதியிலாமல் படிப்பது, ஏன் இந்த முறை பத்தாவதில் ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கிய மாணவி சொல்லியுள்ளார் “ 5வது வரை தனியார் பள்ளியில் படித்தேன், அதற்க்குமேல் பள்ளிகட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளியில் படித்து ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கினேன்என்றிருக்கிறார்

இப்படி சமுகம் ஏற்ற தாழ்வுடன் இருப்பதையும், தனியார் பள்ளிகளின் கட்டணகொள்ளை, சிறுவயதிலிருந்தே அவர்கள் மனதை வாட்டும் ஏற்ற தாழ்வுகள் அதிலும் கவனம் சிதறமால படிப்பது. உடல் உழைப்பை போட்டுவிட்டு கிடைக்கும் நேரத்தில் படிப்பது போன்ற சகல விடயங்களை பார்த்து நேர்மையாக மக்களுக்கு இந்த ஏற்ற தாழ்வுகளினால் குற்ற உணர்ச்சியும் அதை மாற்ற சமுக கோபமும் வரவேண்டும், மாறாக இந்த மாதிரி செய்திகளை கேட்டு உச்சு கொட்டுவதும், அல்லது குறிபிட்ட பத்திரிக்கையில் பெயர்வருவது மாதிரி கொஞ்சம் பணம் கொடுப்பதிலும் குற்ற உண்ர்ச்சியும் சமுக கோபத்தையும் போக்கிக்கொள்கின்றனர்..

சரி இதை சுட்டி காட்ட வேண்டிய பத்திரிக்கைகள் தேமே என்று இருப்பதும் அல்லது திட்டம் போட்டே அனுதாபம் பொங்குவது மாதிரி கட்டுரை எழுவதும், அதற்கு ஒரு நன்கொடை வசூலித்து கொஞ்ச நாள் ஏதோ சாதனை செய்த்து போல் திரிவதும். மீண்டுமடுத்த ஆண்டு வரும்போது, தேர்வு முடிவுகளுக்கு இரண்டு வாரத்திற்கு முன்பே அடுத்த அனுதாப மாணவர்களை தேட சொல்லுவாதையும் தொழிலாக கொண்டிருக்கிறது.

கடைசியாக இதில் நேரிடியாக தொடர்புள்ள மானவன் சமுக கோபம்கொள்வதில்லை, மாறாக அனுதாபம் தேடவே முயற்சிக்கிறார். அல்லது வாய்ப்புகள் கிடைக்கபெற்று ஒரு நல்ல நிலையில் வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டால், நீண்ட நாள் கழித்து நேரம் கிடைக்கும் போது அன்று செய்திதாளில் இது போன்ற ஒரு மாணவனை பற்றிபார்த்தால், தானும் ஒரு காலத்தில் இப்படி தான் படித்தேன் என்று கண்ணாடியை கழற்றி, தன் கதை சொல்லி, நாஸ்டலிஜியவில் மூழ்கிவிடுவார்.

இதையெல்லாம் அரசு தான் செய்ய வேண்டும் என்று சொல்லுபவர்கள் செய்யாத அரசை நான்கு மணிநேரம் வெயில் நேரத்தில் வரிசையில் நின்று வோட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் ஒருவர் கூட சமுகத்தில் பட்டவர்தனமாக நிலவும் இந்த ஏற்ற தாழ்விற்காக வருத்தபடுவதோ வெட்கபடுவதோ இல்லை மாறாக குற்றவுணர்ச்சியை மறைக்க ஒரு வடிகாலை தேடிகொள்ளுகிறார்கள்.

0 கருத்துக்கள்: