”தெரிதா, ஒரு ’மறைபொருள் பயங்கரவாதி’”
- பூக்கோ
- பூக்கோ
(தான் எழுதும் எழுத்தில் பல ’மறைபொருள்களை’ வைத்திருப்பார். அதை பற்றி யாரவது எதிர்விணையாற்றினால், உடனே ’நான் அந்த பொருளில் எழுதவில்லை, நீங்கள் தவறாக புரிந்துக்கொண்டிருக்கிறீர்கள்’, என்று அவர்களை ’முட்டாள்’ என திட்டுவார். அதனால் அவர் ’தீவிரவாதி’).
சாரு நிவேதா என்னும் எழுத்தாளர் நாவல்களை படித்த போது உள்மனம் ஒன்றை திரும்ப திரும்ப சொன்னது ‘இவர் தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு ஏதோ புதிய முயற்சி செய்கிறார்” என்று அதனால் ஊந்தப்பட்டு அவரின் கட்டுரைகள், விமர்சனங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். பல விமர்சனங்கள் விமர்சனங்களை போல் இருந்தன.கட்டுரை என்ற நோக்கிலும் மிக கச்சிதமாகவும் பொருந்தின, எழுத்திலும் சோர்வு தட்டவில்லை - ஒரு 200 பக்க புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிடும் அளவு அருமையாக இருந்தது.அவரின் வாசகனானேன் - அவர் எழுதிய புத்த்கங்களை கண்மூடி வாங்கலாம் எனும் அளவிற்கு.
அத்துடன் நின்றிருக்கலாம், இணையம் அறிமுகமாகி பதிவுகள் படிக்க தொடங்கியிருந்த நேரம் அவரின் இணைய தளத்தை படிக்க தொடங்கினேன்......
சொந்த வாழ்க்கை:
பெரும்பாலும் பதிவுகளை இலக்கியமாக எடுத்துகொள்ள முடியாது, ஆனால் ஒரு எழுத்தாளர் எழுதுகிறார் எனும் போது நிச்சயமாக சாருவின் பல பதிவுகள் மிகுந்த தரத்தில் இருந்தன.யாரவது புதிதாக எழுத வேண்டுமென்றால் ‘சாருவின் இணையத்தை படியுங்கள்’ என்று பரிந்துரைக்கும் அளவிற்கு.
பெறும்பாலான அவரின் சொந்த வாழ்க்கையை பதிவிடுவார்; தன்னை பற்றிய சுயவிமர்சனத்தை முன்வைப்பார்.செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பார், அழுவார், கதறுவார், ஏங்குவார், மகிழ்வார். விளம்பரம் செய்வார், விமர்சன்ம் புரிவார், எதிர்விணையாற்றுவார், பல எதிர்வினைகளுக்கு புன்னகையுடன் பதிளளிப்பார். அவரின் பதிவுகளை படிக்கும் போது அவரின் குடும்ப உறுப்பினர்கள் நமக்கு நெருங்கிய சொந்தங்கள் போல் தெரியும்.அவரின் நண்பர்களை போல் நமக்கும் நட்புகிடைக்காத என நம்மை பொறாமைப்பட வைக்கும்.
அறிமுகங்கள்:
தன்னுடைய எழுத்துகளின் மூலம் தன் வாசகர்களுக்கு பல நல்ல இலக்கியத்தையும், நல்ல எழுத்தாளர்களையும், படைபாளிகளையும் அறிமுகம் செய்வார்.அத்துடன் நிற்க்காமல் அவர்களின் மிக முக்கிய படைப்புகளை பகிர்வார். ’என்ன மனுஷன்ப்பா இவர், எவ்வளாவு வாசித்திருக்கிறார்’ என்று பிரம்மிப்பு எழும், அத்ன் நடுவே தன்னுடைய எழுத்தின் காதலை தெரிவிபார். எழுத்து மாத்திரம் இருந்துவிட்டால் போதும் அவர் உயிர் வாழ என்பதை படிக்கும் போது அவரை பார்த்து காலில் தொட்டு கும்மிட தோன்றும்.காலில் தொட்டு கும்மிட்டு அவரின் சீடரானவர்களை எங்கும் பார்க்கலாம், முக்கியமாக இணையத்தில்.
ஜெயமோகன் VS சாரு நிவேதா
பொதுவாக நேர்மையாக விமர்சிக்கும் அனைவருக்கும் முதலில் கிடைப்பது திட்டுகள் தான். அதுவும் முற்போக்காக பேசும், இலக்கியங்களை முன் வைக்கும் சாருவுக்கு கிடைக்கும் எதிர்விணைகள் சகஜம் தான். ஆனால், அவரின் வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு முக்கியமான விஷயம் அவரும் ஜெயமோகனும் ஆற்றும் ‘இலக்கிய யுத்தம்’ அதை பெரும்பாலும் படிக்காமல் தவிர்த்துவிடுவது நல்லது. ஜெயமோகன் நல்லவர் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் ஒரு ’ஹிந்துத்வா’வாதி தன் நூலில் அதை அமைதியாக எழுதுவார். ஆனால் அவருக்கும் வாசகர்களும் ரசிகர்களும், சிஷ்யர்களும் இருந்து தொலைத்தனர். இணையத்தில் சாரு-ஜெமோ என இருவரும் ‘இலக்கிய யுத்தம்’ என்னும் பெயரில் எழுதிகொண்டிருந்த ‘மலக்காற்றை’ சுவாசிக்காமல் இணையத்தில் வாசிப்பவர்கள் தப்பிப்பதை கடினமாக்கியது அவரின் சிஷ்யபரமார்த்’மாக்கள்’ தான்.
சாருவும், ஜெமோவும் சொல்லிகொள்ளும்படியில்லை என்றாலும் தமிழில் தவிர்க்க முடியாத எழுத்தாளர்கள் எனபதை யாரும் மறுக்கயிலாது.ஆனால் அவர்களுக்குள் நடத்திக்கொண்ட ‘இலக்கிய யுத்தம்’ இருவரும் எழுத்தில் கொட்டிய ’மலம்’.அதை அனைத்தையும் பிரசாதமாக எடுத்துகொண்டது அவரின் சிஷ்யகோடிகளின் ஜென்மபலன்.அவர்கள் அதை உணவுடன் மற்ற அனைவருக்கும் வினியோகித்தது?
செலிபிரிட்டி:
சுஜாதா மறைந்த நாளிலிருந்து. சாருவின் பதிவுகள் மாற தொடங்கின, தன்னை எப்படியாவது அடுத்த சுஜதாவாக மாற்றும் முயற்சியில் இறங்கினார்.தன் வாழ்க்கை பாரதியருடையது போல் என்றார், தன் புத்த்கங்கள் ’ஓரன் பமுக்’குடையது போல் விற்பதில்லை என்று புழுங்கினார், தன்னை ’கலியுக சித்தர்’ என்றார், எழுத்துளக கடவுள் என்றார் போதும் போதும் என நாம் அவரின் பதிவுகளை பார்த்து முகம் சுழிக்க ‘நீ வக்கத்தவன் , என எழுத்தை மீண்டும் மீண்டும் வாசிக்கும் என் அடிமை நீ” என் வாசகனை பற்றிய அவரின் எண்ணம் மிக உயர்ந்த நிலைக்கு சென்றது.சிஷ்ய பரமார்த்மாக்கள் கன்னத்தில் போட்டு கொண்டனர்..
‘தான் அசைந்தால் அசயும் உலகமெல்லாம் ‘ என மிக நிச்சயமாக நமப தொடங்கினார், இப்பொதும் அவரின் சிஷ்ய கோடிகள் ‘ஆமாம் சாரு பகவானே” என்று கன்னத்தில் போட்டு கொண்டனர்.கடிதங்களில் ‘சாரு நீங்கள் கடவுள், உங்களின் நாமத்தை 108 முறை சொல்லுகிறேன், உங்களின் எழுத்தை தினமும் படித்து உங்களுக்கு துதி பாடுகிறேன்” என்று எழுதிவிடுவார்கள்.
(சாருவின் நாவல்களை விமர்சிப்பவர்கள் விட்டுவிடலாம், பிரச்சனையில்லை அது நம்பதகந்ததும் ஆனால் அவர் ஜெயமோகன் பற்றி ஆற்றும் எதிர்விணைகளை எல்லாம் இலக்கியம் என்னும் போது?)
முரண்பாடுகள்:
செலிபிரிட்டி:
சுஜாதா மறைந்த நாளிலிருந்து. சாருவின் பதிவுகள் மாற தொடங்கின, தன்னை எப்படியாவது அடுத்த சுஜதாவாக மாற்றும் முயற்சியில் இறங்கினார்.தன் வாழ்க்கை பாரதியருடையது போல் என்றார், தன் புத்த்கங்கள் ’ஓரன் பமுக்’குடையது போல் விற்பதில்லை என்று புழுங்கினார், தன்னை ’கலியுக சித்தர்’ என்றார், எழுத்துளக கடவுள் என்றார் போதும் போதும் என நாம் அவரின் பதிவுகளை பார்த்து முகம் சுழிக்க ‘நீ வக்கத்தவன் , என எழுத்தை மீண்டும் மீண்டும் வாசிக்கும் என் அடிமை நீ” என் வாசகனை பற்றிய அவரின் எண்ணம் மிக உயர்ந்த நிலைக்கு சென்றது.சிஷ்ய பரமார்த்மாக்கள் கன்னத்தில் போட்டு கொண்டனர்..
‘தான் அசைந்தால் அசயும் உலகமெல்லாம் ‘ என மிக நிச்சயமாக நமப தொடங்கினார், இப்பொதும் அவரின் சிஷ்ய கோடிகள் ‘ஆமாம் சாரு பகவானே” என்று கன்னத்தில் போட்டு கொண்டனர்.கடிதங்களில் ‘சாரு நீங்கள் கடவுள், உங்களின் நாமத்தை 108 முறை சொல்லுகிறேன், உங்களின் எழுத்தை தினமும் படித்து உங்களுக்கு துதி பாடுகிறேன்” என்று எழுதிவிடுவார்கள்.
(சாருவின் நாவல்களை விமர்சிப்பவர்கள் விட்டுவிடலாம், பிரச்சனையில்லை அது நம்பதகந்ததும் ஆனால் அவர் ஜெயமோகன் பற்றி ஆற்றும் எதிர்விணைகளை எல்லாம் இலக்கியம் என்னும் போது?)
முரண்பாடுகள்:
தன்னை பாரதியாருடன் ஒப்பிட்டுக்கொள்வார், பாரதியார் எப்படி நிற்பார் என்று யாரவது பார்க்கவேண்டுமானால், சாருவின் புத்தக வெளியீட்டு விழாவில், அமிர்-சசி இருவரிடம் இவர் நிற்க்கும் புகைபடங்களை பாருஙகள் (அவரின் சிஷ்யா கோடிகள் அந்த படத்தை வைத்து கும்மிடுவதும், அதில் இருந்து விபூதிவருவதும் வேறு விஷயம்).
தன்னை இப்படி பல பிரபலங்களுடன் ஒப்பிட்டுகொள்(ல்)வார். அத்ற்கு தான் தகுதியானவான் என்று அவர் நினைக்கலாம், அவரின் அந்த ஒப்பிடும் முறையும் தவறில்லை ஒரு வித நல்ல பழக்கம் தான்.
அவரகளுக்கு எல்லாம் கிடைக்கிறது எனகெல்லாம்கிடைக்கிறதா? என்று பொறுமாவர் தவறில்லை. அத்ற்கு பிரயசித்தமாக தன் வாசகர்களை ’தன் சிஷ்ய கோடிகள், தன் காலில் பூஜை செய்து அந்த புனித்நீரை குடிப்பது போல் குடியுங்கள்” அப்பொழுது தான் என் மனம் ஆரும் என்பார்.
விமர்சனங்கள்:
இவர் எழுதும் விமர்சனம் அதாவது அதன் கட்டமைப்பு ஒரு சரியான விமர்சன கட்டுரைகான உதாரணம்.ஆனால் ஒரு கட்டத்தில் அந்த கட்டுரைகளை இவர் தன்னை ‘மேதாவி’ என் காட்டிகொல்ல பயன்படுத்தினார்-தவறில்லை.தனக்கு பிடிக்காதவர்களை கட்டம் கட்ட உபயோகித்துகொள்வார்.நல்ல வாசகன் அதை விட்டுவிடுவான் அவரின் சிஷ்யாகோடிகள் அதையும் எடுத்துகொள்வார்கள்.
தொடர்ந்து அவரின் கட்டுரைகளை வாசிக்கும் அனைவருக்கும் அவரின் முரணபாடான கருத்துககளும், வாழ்க்கையும் புரியும். கருத்தளவில் மாற்றம் என்பது வேறு. நாட்கள் போகின்ற நாம் கற்றுகொள்கிறோம் அதனால் நம் பழைய கருத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது என்பது நியாயம்.
என கருத்திது, என்னை ஆதரிக்கும் நண்பனுக்கு இது பிடிக்காது,என் எழுத்தை அவன் பிரசுரித்து எனக்கு உதவி செய்வதாலும், எனக்கு உதவி செய்யும் பிற நணபர்களுக்கு பிடிக்காது அவர்களின் மனதை புண்படுத்தகூடது என அவர் தன் கருத்தை மாற்றிகொள்வது முரண்பாடு.அவரால் அரசியலை விமர்சிக்க முடியும் கலைஞரையல்ல(கனிமொழி!?) அவரால் ஈழமக்களுக்காக் கண்ணீர் விட முடியும், மனம் கொதிக்கும் என்ன போராட்ட முறையில் தான் அவர் தினமலர் சொல்லும் நிலையை எடுக்க வேண்டும்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உட்கார்ந்து கையில் ஒரு பாரின் சரக்குடன் ‘தாஸ்த்வொயிஸ்க்கி’யின் படைப்புகளை பேசும் இலக்கியவாதி. கார்ப்ரேட் கம்பெனியில் கம்யுனிஸ்ட்டாக வாழும் நவின காரல் மாக்ஸ்.
முரண்பாடான எழுத்தை கொண்ட கட்டுரைகளை வாசகர்கள் புறக்கனித்துவிடுவார்கள், மெல்ல. (என்ன கொடும சாரு சார் உங்களின் சிஷ்யா கோடிகள் கூட இப்பொழுதெல்லம் உங்களின் முரண்பாடுகளை பற்றி வருத்தபடுகிறார்கள்)
இவரை பொருத்த வரையில், இவரை பற்றிய நேர்மையான எதிர்விணைகளுக்கு இவர் பதிளளிக்க மாட்டார். அதற்கு நேரம் செலவிடுவதை விட ’என உயிரினும் மேலான எழுத்தை காதலிப்பதையும் , எழுதுவதையும் செய்வேன்’ என்பார்.என்ன தன் கருதிற்க்கு ஒத்துவரமாட்டார் என தெரிந்தும், எவ்வளாவு சொன்னாளும் திருந்தாத ஜெமோவின் ஒரு வரிக்கு, தன் பொன்னான நேரத்தில் இருந்து செலவு செய்து 100 பக்கம் எழுதுவார்.. பின்நவினத்துவம், பின்நவினத்துவம்....அவரின் சிஷ்ய கோடிகள் மீண்டும் கன்னத்தில் போட்டுகொல்வார்கள்.
தமிழ் எழுத்தாளர்கள்:
பெறும்பாலும் சாரு தமிழில் இலக்கியத்திய வாசிக்காததால் அவர் தமிழ் எழுத்தாளார்களை பற்றி எழுதிய அனைத்து விமர்சன கட்டுரைகளும் ‘மலம்’ அதை தேர்ந்த வாசகன் ஒதுக்கிவிடுவான்.சிஷ்ய கோடிகளுக்கு பிரசாதம், அவரை பிடிக்காதவர்களுக்கு பிராம்மாஸ்த்திரம்.
ஆனாலும் அவர் வாழும் பாரதியார், இப்பொதைய சுஜாதா, நாளைய பிரமிள்.......ஆமாம் தானே சாரு
டிஸ்கி :
இதுபோலெல்லாம் பிற எழுத்தாளார்கள் பற்றியும் தேவையான நேரத்தில் பார்க்கலாம்.
இது இலக்கிய விமர்சனமெல்லம் இல்லை, காரணம் அதையெழுத எனக்கு தகுதியில்லை.
இது சாரு எனும் தனிநபர் மீதான தாக்குதல் இல்லை. எதுக்கு வம்பு இவர் ஜெமோவை பற்றி எழுதிய தனிநபர் தாக்குதளுக்கு தணடனை கொடுக்காத இந்திய சட்டம். இவர் மீது தனி நபர் தாக்குதல் தொடுத்த பைத்தியகாரனுக்கு த்ண்டனை கொடுக்குமாம்.சட்டம் கூட சாருவை போல் தான் போல, முரண்பாடானது.?



44 கருத்துக்கள்:
இப்படியே கெமோவை ஹீரோவாக்கிவிடுவார்கள் போல் உள்ளது...
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
1234567890
அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஒ,ஓ,ஒளவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அக்....
I like it
nithyakumaaran
ஜெமோவையும் இதே மாதிரி கிழித்து தொங்க விடுவீர்களா
//ஆனாலும் அவர் வாழும் பாரதியார், இப்பொதைய சுஜாதா, நாளைய பிரமிள்.......ஆமாம் தானே சாரு//
:)))))))))
(இந்த உலக செய்திகளை தெரிஞ்சுக்கறதுக்கான பின்னூட்ட முன் மொழிதல் இது!)
அக்னி..அருமையாக விமரிசித்துள்ளீர்கள்..
//பெறும்பாலும் சாரு தமிழில் இலக்கியத்திய வாசிக்காததால் அவர் தமிழ் எழுத்தாளார்களை பற்றி எழுதிய அனைத்து விமர்சன கட்டுரைகளும் ‘மலம்’ அதை தேர்ந்த வாசகன் ஒதுக்கிவிடுவான்.//
நல்ல காமெடிங்க. நர்சிம் பதிவ நீங்க படிக்கலையா? 35 வருஷமா எழுதறவர் தமிழ் இலக்கியத்தை படிக்கலன்னு எப்படி சொல்றீங்க?
//பெறும்பாலும் சாரு தமிழில் இலக்கியத்திய வாசிக்காததால் அவர் தமிழ் எழுத்தாளார்களை பற்றி எழுதிய அனைத்து விமர்சன கட்டுரைகளும் ‘மலம்’ அதை தேர்ந்த வாசகன் ஒதுக்கிவிடுவான்.//
நல்ல காமெடிங்க. நர்சிம் பதிவ நீங்க படிக்கலையா? 35 வருஷமா எழுதறவர் தமிழ் இலக்கியத்தை படிக்கலன்னு எப்படி சொல்றீங்க?
avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
neengalum yenga
avvvvvvvvvvvvvvvvvvvv
நன்றி தண்டோரா,நித்யா,நிலாரசிகன்,உடன்பிறப்பு, சென்ஷி,டிவிஆர் சார்,பாலா
//ஜெமோவையும் இதே மாதிரி கிழித்து தொங்க விடுவீர்களா///
கண்டிப்பாக
/// நிலாரசிகன் said...
//பெறும்பாலும் சாரு தமிழில் இலக்கியத்திய வாசிக்காததால் அவர் தமிழ் எழுத்தாளார்களை பற்றி எழுதிய அனைத்து விமர்சன கட்டுரைகளும் ‘மலம்’ அதை தேர்ந்த வாசகன் ஒதுக்கிவிடுவான்.//
நல்ல காமெடிங்க. நர்சிம் பதிவ நீங்க படிக்கலையா? 35 வருஷமா எழுதறவர் தமிழ் இலக்கியத்தை படிக்கலன்னு எப்படி சொல்றீங்க?
///
நீங்க தான் காமெடி பண்றீங்க “நான் சாரு சொன்னத எழுதியிருக்கேன்” அவர் கட்டுரைகளை படிக்கவும்... அவர் கட்டுரைகளில் பொய் சொல்லியிருந்தால் அடியேன் பொருபல்ல, நான் அவர் கட்டுரைஅகலை படித்தால் சொல்லுகிறேன்..
எங்க அண்ணே தண்டோராவுக்கு ஒரு பெரிய ரிப்பீட்ட்டு.....
//இணையத்தில் சாரு-ஜெமோ என இருவரும் ‘இலக்கிய யுத்தம்’ என்னும் பெயரில் எழுதிகொண்டிருந்த ‘மலக்காற்றை’ சுவாசிக்காமல் இணையத்தில் வாசிப்பவர்கள் தப்பிப்பதை கடினமாக்கியது அவரின் சிஷ்யபரமார்த்’மாக்கள்’ தான்.//
சரியான வார்த்தை!
எதிர்வினையாற்ற ஒரு மறைபொருள் தேவைப்படுகிறது!
ஆனால் பகடிக்கு தேவைப்படுவதில்லை, அதனால் நான் எஸ்ஸாகிட்டேன்!
எங்க தலைவர பத்தி எழுதுனா ரத்தம் கக்கி சாவே!
inga paarunga comedy
http://www.writermugil.com/?p=740
actually ithaan nadukuthu pola.
நன்றி டக்ளஸ்,வால்,அனனி, சொக்கலிங்கம்
அக்னி,
நல்லா சொல்லியிருக்கீங்க, சொல்ல வந்ததை. நானும் ஒன்று போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் பதிவு ஒன்று கடவுள்கள்: சாரு Vs ஜெமோ-Readers
அப்படியே ஜெமோ ஹிந்துத்துவா முகமூடி பற்றியும் கொஞ்சம் எழுதுங்க... எதிர்பார்ப்புடன்,
தெகா.
நல்ல கட்டுரை அக்னி.
ம்ம்ம் நெக்ஸ்ட்ட்ட்ட்
நன்றி ஜோ, ஆதவன்
சாரு ... ஜெ.. பைத்திகாரன்... நரசிம்.. லக்கி... ஆதிஷா..சுரேஷ்கண்ணா
சாரு ... ஜெ.. பைத்திகாரன்... நரசிம்.. லக்கி... ஆதிஷா..சுரேஷ்கண்ணா
அக்னி,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
(நண்பா, பல இடங்களில் இருக்கிற எழுத்துப்பிழைகளை திருத்துங்கள்)
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
பிடியுங்கள் கவிச் சாபம். உங்கள் ஆபாச கட்டுரைக்கு சட்டப்படி கடுமையான தண்டனை காத்திருக்கிறது. மான நஷ்ட வழக்கு தொடருவது சம்பந்தமாக வழக்கறிஞரை ஆலோசித்துக்கொண்டிருக்கிறோம்.
பதிவு பெருசுனாலும், விடாம படிச்சேன்!!
பேசாம இவனுங்க எழுதுறத படிக்காம விட்டா..
நம்ம வீட்டுல சோரு கிடைகாதா என்ன?
//சாருவும், ஜெமோவும் சொல்லிகொள்ளும்படியில்லை என்றாலும் தமிழில் தவிர்க்க முடியாத எழுத்தாளர்கள் எனபதை யாரும் மறுக்கயிலாது.ஆனால் அவர்களுக்குள் நடத்திக்கொண்ட ‘இலக்கிய யுத்தம்’ இருவரும் எழுத்தில் கொட்டிய ’மலம்’.அதை அனைத்தையும் பிரசாதமாக எடுத்துகொண்டது அவரின் சிஷ்யகோடிகளின் ஜென்மபலன்.அவர்கள் அதை உணவுடன் மற்ற அனைவருக்கும் வினியோகித்தது?//
உண்மை சுடும்
உண்மை கசக்கும்
-oOo-
சுடுகிறது
கசக்கிறது
நன்றி கலை, அகநாழிகை, அனனி, புருனோ சார்
ஏங்க,
ஹிந்துத்வா-னா பாவமாங்க? ஓரு முஸ்லிம் இஸ்லாமை பின்பற்றலாம், கிருஸ்தவர் கிருத்துவத்தைப் பின்பற்றலாம் ஆனால் ஹிந்துத்வம் மட்டும் கெட்ட வார்த்தையாங்க?
///Anonymous said...
ஏங்க,
ஹிந்துத்வா-னா பாவமாங்க? ஓரு முஸ்லிம் இஸ்லாமை பின்பற்றலாம், கிருஸ்தவர் கிருத்துவத்தைப் பின்பற்றலாம் ஆனால் ஹிந்துத்வம் மட்டும் கெட்ட வார்த்தையாங்க?
///
ஹிந்துத்த்வாவில் சில விஷ்ய்ங்கள் கசப்பானவை- மனுதர்மம், வர்ணம் அத்னால் ஹிந்துத்வா எனும் வார்த்தியை வெறுக்கிறோம், அதே போல் இசுலாமியர்களும் கிருஸ்த்துவர்களும் த்ங்கல் மதத்தின் கோட்பாடை வைத்து மனிதரை மோசம் செய்தால் அதையும் கண்டிப்போம் இதில் மாற்றுகருத்தில்லை
நன்றி அக்னி,
நானும் இந்த வர்ணம், மனு தர்மம், இது பற்றியெல்லாம் மதசார்பற்றவர்கள் (அதுதாங்க `term`) அடிக்கடி சொல்லக் கேள்விபட்டிருக்கிறேன். ஆனா எங்கேயும் படிக்க கெடைக்கலே. தயவுசெய்து அத நீங்க எங்க படிச்சீங்க, நான் படிக்கிறதுன்னா எதுவும் சுட்டி அல்லது புத்தகப்பெயர் இருந்தா கொஞ்சம் தெரியப்படுத்துங்க.
//த்ங்கல் மதத்தின் கோட்பாடை வைத்து மனிதரை மோசம் செய்தால் அதையும் கண்டிப்போம் இதில் மாற்றுகருத்தில்லை// எனக்குத் தெரிஞ்சு அது மாதிரி எந்த `மதசார்பற்றவர்களும்` கண்டிச்சு நான் பார்த்ததில்லைங்க. தவிர, கெட்ட விஷயங்கள் இல்லாத மதமே இல்லைங்க. அதுக்காக ஒரு மதத்த தனிப்பட்ட முறையில நீங்க பின்பற்றாதது - உங்கள் சொந்த விஷயம். ஆனா அது வெறுக்கத்தக்கதுன்னு வெளிப்படயா பதிவு செய்வது - அதுவும் ஊருக்கு இளைச்ச ஆண்டிய மட்டும் குடையறது - அவ்வளவு நியாயமா படலீங்க. நான் வேற எதுவும் பட்டியல் குடுக்க விரும்பலைங்க.
அனனி நண்பருக்கு,
நீங்கல் கண்ணை மூடிகொண்டு உலகம் இருட்டு என்றால் எப்படி.. பகவத் கீதையின் 4ம் அத்தியாம், ராமயனம், வேத்ப்க்களில் தான் கூறபட்டுல்ளது..தராளமாக நீங்கள் படிக்கலாம்...
கடவுளை உணமியாக நம்புவனௌக்கு மதம் தேவையில்லை அவன் அனுதினமும் கடவுளை பார்கிறான்,
ஜென்,சூபி,சித்தர்கள்,ஆழ்வார்கள் மதத்தைவிட கடவுளை முனிறுத்தியவர்கள் தாம்..
மதம் கடவுளல்ல அதை வெறுக்கிறேன் என்று சொவது தவ்றில்லை கடவுள் ஐ பொருத்த வர் இருகிறதா இல்லை என்று ஹான் கேள்வி வரும்...
என் நோக்கம் மததையோ கடவுளையோபற்ரியது அல்ல மனித்தை பற்றியது..மாசில்ல மத்ம் இல்லையென்றால் ஏன் மசுல்ல மதம் வேண்டும் என்கிறீகள் அதற்க்கு பதில் மாசை களையலாமே?
அக்னி,
கடைசி பின்னூட்டம் ஒன்னுமே புரியாமல் இருக்குது!
நாங்கூட ஓவர் மப்புல இப்படி தான் தப்பு தப்பா அடிப்பேன், ஒருவேளை நீங்க அதிக வேளைபளிவினால் களைப்பாக இருக்கலாம், ரெஸ்ட் எடுங்க நாளைக்கு பார்த்துக்கலாம்!
ஆமாம் வால் இன்னும் தூங்கவேயில்லை (இல்லன்ன மாத்திரம் ?) சும்மா
அக்னி,
எனது கருத்துப்பதிவில், வருனாசிரமம், மனு தர்மம் ”இவையிரண்டும் இல்லை” என்று நான் எங்கும் மறுக்கவில்லை (எனவே உலகம் இருட்டு என்று நான் சொல்லவில்லை).
இவையெல்லாம் எங்கு படிக்க கிடைக்கும் என்றுதான் நான் கேட்டிருந்தேன் (எனவே நான் கண்ணை மூடிக் கொள்ளவும் இல்லை - கண் பார்வையே இன்னும் தெளிவாகவில்லை).
அதே நேரம் இதையெல்லாம் நீங்கள் படித்திருக்கிறீர்களா எனற கேள்விக்கு நேரடி விடையும் அளிக்கவில்லை. உங்களுடைய பதிலில் சற்று எரிச்சல் கலந்து இருப்பதாகப் படுகிறது (தூக்கம் காரணமோ).
கீதையின் நான்காம் அத்தியாயம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் - எனவே அதனை நீங்கள் படித்துள்ளதாக எடுத்துக்கொள்கிறேன் (நான் கேள்விப்பட்டவரையில், கீதையில் மனு தர்மம் உள்ளது என்று நினைக்கிறேன்). ஆனால் இராமாயணம் மற்றும் வேதங்களில் எது பற்றி என்ன எங்கு உள்ளது? இராமாயணம் ஓரளவு எளிதாகக் கிடைத்து விடக்கூடும்; வேதங்கள் எங்கு படிக்கக் கிடைக்கும்? சுட்டியோ புத்தகப் பெயர்களோ கேட்டிருந்தேன். இவையெல்லாவற்றுக்கும் மேலாக இவையனைத்தையும் நீங்கள் படித்திருக்கிறீர்களா?
//ஹிந்துத்த்வாவில் சில விஷ்ய்ங்கள் கசப்பானவை// கசப்பான `சில` விஷயங்கள் அனைத்து மதத்திலும் உண்டு. //இசுலாமியர்களும் கிருஸ்த்துவர்களும் த்ங்கல் மதத்தின் கோட்பாடை வைத்து மனிதரை மோசம் செய்தால் அதையும் கண்டிப்போம் இதில் மாற்றுகருத்தில்லை// அப்படி இது வரை யாரும் செய்ததில்லை என்று சொல்கிறீர்களா? மதத்தை மறுக்கும் அதே அடிப்படையில் கடவுளையும் கூடத்தான் மறுக்கலாம். சரி – இந்து மதத்தில் உள்ள சில குறைவுகளால் அது `வெறுக்கத்தக்க மதம்` என்று கூறும் மதசார்பின்மைக் கொள்கை கொண்டிருக்கும் யாராவது, இந்து மதம் தவிர வேறு ஏதாவது மதம் வெறுக்கத்தக்கது என்று எங்காவது கூறியிருக்கிறார்களா? (நான் இங்கு ”இத மட்டும் சொல்றயே? அதையும் சொல்லு” என்று எந்த மதத்தையும் குறிப்பிட விரும்பவில்லை).
இன்னும் சொல்கிறேன் எல்லாவற்றையும் படித்து விட்டு “நீங்கள் சொல்வது போல் எல்லாம் இல்லை – இதில் அப்படிக் கூறவில்லை – நீங்கள் தறாகப் பொருள் கொண்டிருக்கிறீர்கள்” என்று வாதடுவதற்கு நான் கேட்கவில்லை. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. கண் முன்னே நமது பகுத்தறிவுக்கு தவறென்று தோன்றும் எத்தனையோ விஷயங்கள், இந்து மதத்தில் மட்டுமல்ல, அனைத்து மதங்களிலுமே உள்ளன. எனது ஐயமெல்லாம் மதசார்பற்றவர்களெல்லாம் ஏன் `இந்து மத எதிர்ப்பு` என்ற ஒரே சார்பை எடுக்கிறார்கள் என்பது தான். 'வெறுக்கத் தக்க' மதம் என்று வேறு எந்த மதத்தையாவது பெயர் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? அப்படி முடியாதென்றால் அதற்கு கொடுக்கக் கூடிய மரியாதையோ, அடையக் கூடிய பயமோ வேறு எதுவோ ஏன் இந்து மததிற்குக் கிட்டவில்லை? பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதால் தானா?
அனனி நண்பருக்கு,
மன்னிக்கவும், சிறிது வேலை பளு தூக்கம் உங்களுடன் பேச ஆவலாகவே உல்லேன் ஒரு சிரு வேலை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்.. :)))
நன்றி,
அக்னி
நன்றி அக்னி,
தங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறேன்.
அனனி நண்பர் பெயர் சொல்லியும் விவாதிக்கலாம்..விவாதம் இன்னும் சுவரிசியமாக இருக்கும் என நினைக்கிறேன், யாருடன் விவாதம் புரிகிறேன் என்று தெரிவதால்.. இப்பொழுதும் ஒரு பிரச்சனையில்லை அனனிக்கும் பதில் சொல்லலாம் :)
முதலில் இந்துமத வேதங்களை படிக்க http://www.sacred-texts.com/hin/index.htm#vedas
இதுமட்டுமின்றி நக்கிரன் வெளியீடான “இந்து மதம் எங்கே போகிறது?” என்ற நூலையும் படிக்கலாம்”
வேத்ங்களில் எங்கெங்கெல்லாம் சர்ச்சை குறிய விஷ்யங்கள் வருகிறது என இந்த் நூல் பட்டியலிடும் நீங்கள் தேடி படிக்க வசதியாக இருக்கும்.. இந்த லிங்கில் மனுதர்மமும் உள்ளது..
முடிஎதளவு வேதங்கள் பல நல்ல விஷ்யங்கலை அந்த காலத்திற்கு ஏற்றார் போல் சொல்லியுள்ளன அத்னால் சின்ன வயதிலிருந்த ஹிந்து மததை முழுவதாக தெரிந்து கொள்ளும் ஆசையில் வேதஙக்ளை தேடி படித்திருக்கிறேன்..
இப்பொழுது கூட வேத நூல்க்களில் உள்ள சர்ச்சைகுரிய விஷய்ங்களை நீக்கிவிட்டு புதிய வேதத்தை உருவாக்கலாம் என என் நணப்னுடன் பேசிக்கொண்டிருந்தேன் ..அவர் அது தான் சீக் கிராந்த்தில் உள்ளதே என்றார்.. சீக்கிய மதம் ஹிந்து மற்றூம் இசுலாமிய மத்ங்களின் நல்ல விஷ்யங்களை மட்டும் பிரித்தெடுத்து உருவாக்கியவை..
பெரியாரே பல முறை மற்ற சமயங்களை விமர்சித்திருக்கிறார் அதை நீங்கள் பழையை பெரியாரின் கட்டுரை தொகுப்புகளில் பார்க்கலாம்..
தோழர் தமிழ் ஓவியா அதை பதிவிடுவார் அவ்ரின் லிங்க் இங்கே http://thamizhoviya.blogspot.com/
மற்ற மதங்களில் (கிறிஸ்த்துவம், இசுலாம், பவுத்தம், சமணம்) மக்கள் பிரிவை ஏற்படுத்தினர் ஆனல் அவர்களின் ஆதரா நூல்களில் எந்த பிரிவும் இல்லை இந்து மததில் ஆதரா நூலே மக்களிடம் பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளது (கவனிக்கவும்) இது தான் ஹிந்து மததை பெறும்பாலும் குற்றம் சாட்ட காரணமாக மைகிறது..
ஹிந்துத்த்வா என்கிற தத்துவம் ஹிந்து மத ஆதரா த்துவமில்லை, சில மத வெறியர்கள் ஏற்படுத்தியது ஆதாகபட்டது இந்துக்களை தவிர மற்ற மதத்தினரை கொல்ல வேண்டும் அல்லது அவ்ர்கள் இந்து பூமியான இந்தியாவில் வாழ கூடாது என்பது.. அத்னால் ஹிந்துத்வா என்று சொன்னால் அது ஹிந்து மத்தை குறிக்கிறது என கொலபவர்கல் போலி ஹிந்துக்கள் உண்மையான ஹிந்துகளுக்கு மற்ற மதம் பிரச்ச்னையில்லை அதே ஹிந்துத்வாவை பின்பற்றும் ஹிந்துக்களும் மிக குறைவு தான்.. பெறுமாபாலனவர்கள் மற்ற மதத்தினருடன் ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள் :)
மதம் எனப்தே வெறுக்கதக்க ஒன்று தான், எல்ல மத்தையும் கூற முடியும் நிற்க..
திரும்பவும் மத்த்தின் ஆதர் நூலை அடிப்படையாக கொண்டால் இந்த சாதி விஷ்யத்தை இந்து மதம் மாத்திரம் கொண்டுள்ளது.. இன்னொரு உதரணம் பார்போம்
ஒரு அள்வில் நிதுமதம் விஞ்ஞானத்திற்க்கு பெரிதும் துணை போகிறது ஆனால் கிறிஸ்த்துவத்தின் அடிபடை நூல் விஞ்ஞானத்திற்க்கு துணைப்பொக மறுக்கிறது.. தசவாதாரம் டார்வின் கொள்கையை ஆம் என்கிறது பைபிள் டார்வின் கொள்கையை எதிர்கிறது இதே மாதிரி இந்து மதம் விண்வெளி துறயில் ஒரளவு விஞ்ஞானத்தை ஓட்டியே வருகிறது..
அதே மாதிரி பிரபல நூலான ’டான்வின்ஸி கோட்’ பெண்களை வழிபடும் முறையில் ஹிந்து மதத்தை சுட்டிகாட்டி கிறிஸ்துவ மதத்தை கேள்வி கேட்டிருந்தார்..
:)
யோவ் தலைப்புல ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு. மாத்துய்யா..
சிஷ்யார்கள் இல்ல சிஷ்யர்கள்..!
;-)
நன்றி அக்னி,
தங்கள் பதிலை இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை. முதல் பத்தி மட்டும் தான் படித்தேன். அலுவல் முடிந்து முழுமையாக படித்து விட்டு பதிலிறுக்கிறேன்.
மேலும் பெயரில் என்ன இருக்கிறது? உமது மற்றும் எனது identity-ல் (சரியான தமிழ் வார்த்தை சிக்கவில்லை - தெரிந்தால் சொல்லுங்கள்) ஒரு எழுத்து தான் வேறுபாடு.
மாத்தியாச்சிப்ப
நன்றி அக்னி,
தங்களுடைய பதில் மிக நன்றாக இருந்தது. ஆனால் தங்களது அனைத்து பதில்களும் ஹிந்துத்துவா கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்குபவனுக்கு சொல்லும் பதில்களாகவே தொனிக்கின்றன. நான் முன்னெடுத்த கருத்து வேறு. நான் விவாதிக்க/எழுத வெறுக்கும்/சலிக்கும் ஒரு விஷயம் ஒவ்வொரு வாக்கியத்தின் முன்னும் “நான் ஒரு நாத்திகன்” என்று தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொள்வது. மேலும், இன்றைய சான்றோரின்(உதாரணம் ஞாநி, மார்க்ஸ்) trend-ஆன மதசார்பற்றவர் என்று காட்டிக் கொள்ள அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள துவேஷ அயுதம், சிந்தனாவதிகளாக ஆரம்பித்திருக்கும் அனைவராலும் கைகொள்ளப் படுகிறதென்பது வருந்தத் தக்க விஷயமே. நீங்கள் குறிப்பிட்டுள்ள எதனையும் நான் இன்னும் படிக்கவில்லை; ஆனால், நான் முன்னெடுத்த கருத்துகளுக்குத் தங்களது அனைத்து பதில்களும் (குறிப்பாக கடைசி பதில்) வலுச் சேர்ப்பதாகவே உள்ளன. ஆனால், உரைத்த கருத்தை மாற்றிக் கொள்வதென்பது, அது தவறாக இருந்தாலும், நமது தமிழ் கூறும் நல்லுலகில் நான் இது வரை கண்டிராத விஷயம். எனவே இது குறித்து நமது விவாதத்தை நாம் முடித்துக் கொள்வோம். வேதங்கள் குறித்து தங்களுடைய தகவ்லுக்கு நன்றி. படிக்க ஆரம்பிக்கிறேன். மீண்டும் தொடர்பு கொள்கிறேன்.
நன்றி
thanks anany
ஒரு பதிவுல இம்புட்டு எழுத்து பிழையா :(
Post a Comment