Wednesday, January 11, 2012
கிழக்கு பதிப்பகம் : 1 ஸ்பூன் பால் + 1 லிட்டர் விஷம்
Friday, December 9, 2011
Occupy Wall street - அமெரிக்க கம்யுனிஸ புரட்சிக்கான விதை
Wednesday, December 7, 2011
Tuesday, November 8, 2011
Revolution 2020 – சேத்தன் பகத் 420யின் புரட்சி, விற்பனைக்கு
“Hey Dudes, Today I casted my vote.. Amazing man.. here, photo of my index finger. “
என்று டிவிட்டரிலோ, ஃபேஸ்புக்கிலோ, அமெரிக்க வீசா இண்டர்வியு நடுவில் இந்தியா ஜனநாயகத்தை காப்பாற்றி, ஒரு டீ குடிப்பது மாதிரி இந்தியாவை புரட்டி போட்டுவிட வேண்டும் என்று துடிக்கும் மத்தியவர்க மேட்டுகுடி இளைஞர்களின் கலை தாகத்தை தணிக்கும் ‘தண்ணி டாங்கி’ தான் சேத்தன் பகத்.
இந்திய கல்வி துறையை இவர் போட்டு புரட்டியெடுத்த நாவல் 3 இடியட்ஸ் என்ற சினிமாவாகியது - அதன் தமிழ் வெர்ஷ்னில் விஜய் நடிக்கிறார்.
இவர் தற்பொழுது எழுதி வெளிவந்திருக்கும் ‘Revolution 2020’ எனும் நாவல் மார்கெட்டில் சக்கை போடு போடுகிறதாம்.அந்த நாவலை படித்து இன்புற வேண்டும் என்று நினைத்தது ஒரு தவறா? ஆம என்கிறார் எழுத்தாளர் சேத்தன் பகத்.
காசி தான் யெஸ் சேம் அகோரி காசி தான் கதைக்களம். காதல் மெயின் சப்ஜெக்ட், கரப்ஷ்ன் சைட் சப்ஜெட். போகிற போக்கில் தலைப்பு வைத்துவிட்டோமே என்று ஒரு கேரக்டர் ஆங்காங்கே புரட்சி,நாட்டை புரட்டி போட வேண்டும்.என்று பேசுகிறது.அதான் நாவலின் டேக் லைன் “LOVE. CORRUPTION. AMBITION”.
கதை என்றெல்லாம் பெரிய சமச்சாரம் ஒண்ணுமில்லை. 80களில் வந்த பல ஹிந்தி சினிமா கதை தான். பள்ளியில் படிக்கும் ஆர்த்தி, கோபால்,ராகவ் நண்பர்கள்.கோபால் ஆர்த்தியை காதலிக்கிறான் படிப்பில் கோட்டை விடுகிறான். ராகவ் ஐஐடி மாதிரி ஒரு நல்ல கல்லுரியில் சேருகிறான். கோபால் அரசியல்வாதியோடு சேர்ந்து ஊழல் பேர்வழியாகி உலகத்திற்க்கு கல்வி தந்தையாகிறான்.ஆர்த்தி-ராகவ் காதலர்களாகிறார்கள்.ராகவ் இந்தியாவில் புரட்சி செய்ய வேண்டும் அதுவும் 2020க்குள் யெஸ் சேம் அப்துல் கலாம் 2020க்குள் என்று புரட்சி செய்ய கிளம்புகிறான். கோபல் தன் காதலை விட்டுகொடுத்து விடுகிறான். ராகவ் ஆர்த்தி திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அப்போ புரட்சி?
அதான் கல்யாணம் பண்ணிகினாங்களே..
சேத்தன் பகத் ஒரு வேலை இந்த நாவலும் படமாகும் என்று நினைத்தாரோ என்னவோ. கதநாயகனை வில்லன் ஆக்கிவிட்டார். அதானே பாஸ் இப்பொதைய சினிமா ட்ரெண்ட்.. இல்லை இல்லை வில்லனை முன்னிலை படுத்துகிறார். ஆனால் அவ்வளவு ஊழல் செய்யும் கோபால் காதலை விட்டு கொடுத்தான் என்ற ஒரே காரணத்திற்காக ‘நல்லவன்’ என்று சொல்லிவிட்டார்.
இந்த லாஜிக் ஒண்ணு போதாதா இவர் என்ன புரட்சியை சொல்லியிருப்பார் என்று புரிந்துகொள்ள?
சேத்தன் பகத்துக்கு பெரிய வருமானமே அவர் தனியார் கல்லுரிகளில் கொடுக்கும் தன்னம்பிக்கை லக்சர்கள் தான். இதிலும் அவர் அப்படி ஒரு லெக்சர் கொடுக்க நாவலில் கதாபாத்திரமாக கோபாலின் கல்லுரிக்கு வருகிறார்.
அத்னால் தான் என்னமோ. புரட்சி செய்ய புறப்படும் ராகவ் தன் முதல் புரட்சிகர கட்டுரையில் இந்தியாவின் முன்னேற்றத்திற்க்கு நிறைய தனியார் கல்லூரிகள் வேண்டும் என்ற ஐடியாவை வைக்கிறார்.What a idea sarji?
ஊழலின் எலைட் வடிவம் இந்த தனியார் கல்லுரிகள்.கல்வியை வியாபாரமாக்குவது ஊழல் இல்லையாம் புரட்சியாம்? அதுவும் சரி தானே அவர் வாசக கண்மணிகள் மனுவின் ஸ்ட்ரேயிட் பேரன்கள். இலவசமா எல்லாருக்கும் கல்வி அப்படின்னா கோச்சுப்பாஙக.
நல்லவேலை இப்படியான புரட்சிகர கருத்துக்கள் ரெண்டு மூணு தான் நாவலில் வருகிறது. மொத்த கதையும் வில்லனை சுற்றி நகர்வதால் ‘புரட்சி தப்பித்த்து’.
ஒரு வேலை இவர் புரட்சி செய்ய கிளம்பும் கதநாயகனை மையமாக வைத்து கதை எழுச்தியிருந்தால் என்னவாகி இருக்கும் என்று நினைத்தாலே பீதியில் பேதி வரகுறது.
சேத்தன் பகத் நாவல் படிக்க ஈசிய இருக்கு என்று என் நணபன் சொன்னான். ஃப்ரியா கொடுக்கறாங்கண்ணூ பெனாயில குடிப்பியான்னு கேட்டேன்? நோ பதில்.
அதெல்லாம் சரி அதென்ன தலைப்பு Revolution 2020. ஆமா அப்ப தானே விக்கும். Love 2020, corruption 2020 அப்படின்ன விக்குமா? அதுல என்ன கிக் இருக்கு. தன் ’இன்ஸ்டண்ட் புரட்சிகர’ வாசகர்கள் பற்றி தெரிந்துவைத்திருக்கிறார். அத்னால் தான் காதல், காம்ம் எல்லாம் போக நான்கே பக்கத்தில் மட்டும் புரட்சி வருகிறது.
எப்படியோ இந்தியா 2020 வல்லரசு ஆயி, இந்த எலைட் ஐஐடிக்கள் புரட்சிகாரகள் ஆயி இந்தியா ஏதோ ஆயி.. உஅல்கத்தையே ஆலட்டும் நமகெதுக்கு வம்பு.
Monday, November 7, 2011
நவம்பர் 7: அமெரிக்கவை ஆட்டிப்படைக்கிறது ஒரு பூதம்

தமிழ்நாட்டில் “புரட்சி தலைவர்”,புரட்சி கலைஞர், புரட்சி தளபதி, புரட்சி தமிழன், புர்ட்சி என்று ’புரட்சி’ கேலி செய்யப்படலாம். சமுக புரட்சியை நடத்த தான் விஜயகாந்துடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று போலி கம்யுனிஸ்டுகள் பல் இளிக்கலாம்,ஆனால் உழைக்கும் மக்கள் ஒரு நாள் அதிகாரத்தை கைப்பற்றபோவதின் குறியிடல்லவா இந்த கம்யுனிஸ்ட் புரட்சி.அதை இன்று முத்லாளிகளின் ஐந்தாம் படை திரித்தாலும் கேலி செய்தாலும், கம்யுனிஸத்தை அவர்களால வீழ்த்த முடியவில்லையே! ஏன்?
முன்பை விட அதன் மீது காழ்புணர்வுடன் தானே இருக்கிறார்கள்.அதிக அவதூறுகள், திரிபுகள் சொல்லி திரிகிறார்கள். செத்தொழிந்துவிட்டதாக அறிவித்துவிட்டு பின்பு ஏன் அவர்கள் செத்த பாம்பை அடிக்க வேண்டும்? ஏனென்றால் அந்த கம்யுனிஸ்ட் பூதம் இப்பொழுது முதலாளிகளின் கருவறையான அமெரிக்கவையே ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கிறது.
ஊரை சுரண்டி உலகத்தையே சுரண்டிய அமெரிக்க வல்லரசு, கடைசியில் த்ன் நாட்டு மக்களுக்கு காய்ந்த ரொட்டி துண்டுகளை கொடுக்க முடியாத அவல நிலைக்கு சென்றுவிட்டது.
“OCCUPY” போராட்ட்த்தில் ஒரு அரசு மீட்டிங்கில் புகுந்து மக்கள் ஆரவாரமாக கோஷமிடுகிறார்கள், ”அரசுக்கு ’உண்மையான ஜனநாயகம்’ என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டுமா? எங்களிடம் வாருங்கள் சொல்லிதருகிறோம்” என்கிறார்கள்.
இன்னொரு பக்கம் முன்பை விட உலகம் அதிகமான மக்கள் எழுச்சியையும் அதை விட அதிகமான அடக்குமுறையையும் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஹாலிவுட் சினிமாக்களில் இப்பொழுதெல்லாம் கார்பரேட் தான் வில்லன்.கம்யுனிஸ்ட்டல்ல.
மக்கள் திரள் அதன் எழுச்சி அதன் போர்குணமிக்க போராட்ட்த்தை அரசு தாலாட்டுப் பாடி தூங்க வைத்துவிடலாம் என நினைக்கிறது. அமெரிக்க அதிபர் என்ன செய்வதென்று தெரியாமல் நாட்டு பிரச்ச்ணைக்கு மக்கள் முன் வந்து அறிவுறை கூறலாம என் அழைப்பு விடுக்கிறார். பல நாடுகளை அதை சர்வாதிகாரியிடமிருந்து மீட்டதாக பீற்றிக்கொள்ளும் அமெரிக்க ராணுவம் அடுத்து உண்மையாகவே போரிடவேண்டுமென்றால் அமெரிக்க மக்களுடன் இணைந்து அதன் அரசை எதிர்த்து தான் போரிட வேண்டும். இந்த ஒரு முறையாவது அவர்கள் ஒரு காரணத்தோடும், மக்கள் நலனுக்காகவும் போரிட்ட மகிழ்ச்சியை அடையளாம்.
ரஷியாவில் முத்லாம் உலக போர் முனையில் குளிரில், ரொட்டி இல்லாமல், குண்டில்லாமல் சண்டை போட்ட ராணுவ வீரார்களை பார்த்து ரஷியாவின் மத்திய வர்கம். ஒழுங்காக சண்டை போட தெரியாத மடையர்கள், தேசபக்தியில்லாதவர்கள் என்றது. பின்னாலில் அந்த ராணுவம் உண்மையான தேச பக்தியை காட்டியது அக்டோபர் புரட்சிக்கு தோள்கொடுத்து.
அந்த மத்திய வர்கத்தை விடுங்கள் புரட்சி ரயில் பயணத்தை தொடங்கியவுடன் கடைசியில் எப்படியோ ஏறிவிடுவார்கள்...

http://www.occupytogether.org/
RED SALUTE
Monday, October 17, 2011
வால்ஸ்ட்ரீட,கூடங்குளம் போராட்டமெல்லாம் சுரண்டலுக்கு நடுவில் ஒரு இடைவேளை
அரசின் கோர திட்டங்களால் சுரண்டப்படும் மக்கள் அந்த உண்மையை தெரிந்துக்கொள்ளும் போது அடையும் எழுச்சி மகத்தானது, மரியாதைக்குறியது, ஆதரிக்கப்பட வேண்டியது. ஆனால்,அரசியலற்ற முறையில் நடக்கும் இந்த போராட்டங்கள் சுரண்டலுக்கு மத்தியில் ஒரு (விளம்பர) இடைவேளை தான். இறுதியில் அந்த கூட்டம் சில தற்காலிக வெற்றிகளில் தன்னை இழந்து, மறுசுரண்டலுக்கு தயாராகிவிடுகிறது.
சில மாதங்களுக்கு முன் நடந்த எகிப்த்து புரட்சி,அதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் நிகழ்ந்த மக்கள் எழுச்சி, உலகம் முழுவதிலும் முதலாளித்துவம் கையாலாகத நிலைக்கு வந்ததை தொடர்ந்து ஐரோப்பாவில் மக்கள் வீதிகளுக்கு வந்தது அதன் தொடர்ச்சியாக லண்டனில் வெடித்த கலவரம், இப்பொழுது அமெரிக்க வால்ஸ்ட்ரிட் ஆக்கிரமிப்பு.அன்ன அசரே முதல் கூடங்குளம் வரை மக்கள் உண்ணவிரதம் இருந்த்து என உலக முழுவதும் மக்கள் அரசின் கதைகளையும், அதன் கவர்ச்சிகர தேசபற்று எனு வஸ்த்துவையும், நாட்டின் முன்னேற்றேம் என்ற போலி முழுகத்தையும் தூக்கி வீச வீதியில் இறங்கியது எவ்வளவு மகிழ்ச்சியானது எவ்வளவு மகத்தானது.
லண்டன் கலவரத்தை தொடர்ந்து அமெரிக்காவின் மிகபெரும் பணக்காரரும், பங்கு சந்தை முதலீட்டின் ஜாம்பவானுமான வாரன் பாஃபேட் ஏதோ கம்யுனிஸ்ட் ரேஞ்சிற்க்கு ஒரு கட்டுரை எழுதியதும், இந்தியாவை திறந்துவிட்ட மன்மோகன் சிங்கே உலகமையமாக்கள் எங்களை ஏமாற்றிவிட்ட்து என முழங்கியதும். முதலாளித்துவத்தின் அழுகிய பக்கத்தையும், அதன் வீழ்ச்சியையுமே காட்டுகிறது.இனி முதலாளித்துவம் என்ற அட்டை கத்தி ஆப்பிள் நறுக்க கூட பயன்படாது அந்த காற்று பலுன் வெடிக்கும் நிலையில் உள்ளது. அதற்கான மாற்றை தேடுவதை பற்றி சிந்திக்க தொடங்கிவிட்டனர்.
சரி மார்க்ஸ் சொன்னது போல் முதலாளித்துவம் அத்ற்கான சவக்குழியை அதுவே தோண்டிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், ஐ சி யு யுனிட்டில் இருந்து அதை காப்பாற்ற அதனால் சுரண்டபட்ட மக்களே மறைமுகமாக உதவுவது தான் கொடுமையானது அதுவும், “தாங்கள் வஞ்சிக்கபட்டதற்க்கு நீதி வேண்டும்” என்ற முழகத்தின் மூலம்.
எகிப்த்தில் சில மாத்ங்களுக்கு முன் மக்கள் வீதியில் வந்து போராடினார்கள், ஆனால் ஒரு அரசியலற்ற போராட்டத்தின் இறுதி முடிவு, முபாரக் என்ற ஒரு சர்வாதிகரியிடமிருந்து அடிகாரத்தை வாங்கி ராணுவத்திடம் கொடுத்துவிட்டார்கள். லெபனானில் கடாஃபியிடமிருந்து அதிகாரத்தை வாங்கி அமெரிக்க முதலாளிகளிடம் கொடுத்துவிட்டார்கள்.
இதையெல்லாம் பார்க்கும் போது அரசியலற்ற போராட்டங்களின் விளைவு மக்களின் கோபத்திற்கான ஒரு வடிகால் தான் என்பது உறுதியாகிறது.
சில நேரங்களில் அரசே இதை ஸ்பான்ஸர் வேற செய்கிறது. இந்திய அரசுக்கு அன்ன அசரே போல். ஊழல் மீதிருந்த மக்களின் கோபம் அரசை தூக்கி போட்டிருக்க வேண்டும். வந்தார் அசரே கோபத்தை வற்ற செய்தார், சிரித்தார், கோஷம் போட்டார், எல்லாரும் கத்தினார்கள் சோர்ந்து போய் எதையோ ஒன்றை வெற்றி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்.
அமெரிக்க முதல் ரஷ்யா வரை அதன் பரிசோதனை களமாக மூன்றாம் உலக நாடுகளை மாற்றவும் அதனிடம் எஞ்சிய காயலாங்கடை உலைகளை விற்கவும், ஒரு நாட்டின் அணு திட்ட்ங்களை தன் கட்டுபாட்டில் வைத்துக்கொள்ளவும் உதவி செய்யும் இந்த அணு உலை திட்டங்களை, அதன் அரசியல் பின்னானி தெரியாமல் போராட சென்றனர். கூடங்குளத்தில், அதற்க்கு சில அற்வுஜீவிகள் குரல் கொடுத்தார்கள் ”தென் தமிழகத்தை அழிக்கும் கூடங்குள அணு உளையை மூடு” என்று, அப்போ கல்பாக்கம் அணு உலை அது அவர்களின் அஜெண்டாவில் இல்லை.
உண்ணாவிரதமிருந்த மக்கள் சோர்ந்து போன நிலையில் அரசு அப்பொதைக்கு எதையோ சொன்னது, பணிவது போல் நடித்த்து. ஒரு தீர்மானம் வந்தது. பின்பு அணு உலை சில நாட்களில் இயங்க தொடங்கும். ஏனென்றால் இது ஏகாதிபத்திய நாடுகளின் பிரச்சனை, கூடங்குளம் அணு உலை மூடாபட்டால் அடுத்து அது அமெரிக்கா உடனான அணு கொள்கையை கேள்வி கேட்கும்.அமெரிக்க நினைத்த இந்தியா மீதான சர்வாதிகாரம் கேள்வி கேட்கப்படும்.
இதையெல்லாம் மறைத்து, இதை பற்றிய ஒரு முழு புரிதல் இல்லாமல், மக்களின் கோபத்தை வற்ற செய்து அவர்களை பலவீனமாக்கி அரசின் வேலையை எளிதாக்கியது தான் இந்த போராட்டங்களின் உணமியான வேலை.
வால்ஸ்ட்ரிட்டில் என்ன நடக்கிறதாம், அமெரிக்க உழைக்கும் மக்களும் மத்திய வர்கமும் புரட்சிகரமாக பேசும், அடி வாங்கும், செய்தி சானல்களில் முக்கிய பிரச்சனையாக காட்டப்படும், அதன் பின் ஒரு அரசியல் இல்லை, அந்த கூட்டத்திற்கு ஒரு பொது நோக்கமில்லை, தீர்வு இல்லை, திட்டமில்லை. கோஷ்ம்போட்டு சோர்ந்து போய் கலைந்து விடும் காக்கா கூட்டமாக தான் அரசால் பார்க்கப்படும் அது தான் இந்த போராட்டங்களின் முடிவும்.
மக்களை அரசியலற்ற முறையில் திரட்டுவது அரசுக்கு மறைமுகமாக உதவி செய்வது தான். அப்படி உதவி செய்ய புரட்சிகர என் ஜி ஓக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.
அரசியலற்ற போராட்ட்ங்கள் சுரண்டப்படும் மக்களின் கோபத்திற்கான ஒரு வடிகால், எதோ நடக்க போகிறது என்ற மாயை காட்டுவது இந்த அரசியலற்ற போராட்ட்ங்களின் நோக்கம், அந்த மாயை தான் மக்களை இன்னும் சுரண்ட வழி செய்கிறது.
டிஸ்கி:
இதை பற்றி பொருமையாக விளக்கி, நிதானித்து சில கட்டுரைகளை எழுத வேண்டும். சரி ஒரு நல்ல வேலை செய்ய போகிறேன்
| Reactions: |
Monday, September 19, 2011
தூக்கு மேடை குறிப்புகள் – கம்யுனிஸ்டிற்க்கு வாழ்வும் புரட்சி தூக்கும் புரட்சி

”சாகும் நாள் தெரிஞ்சிட்டா வாழும் நாள் நரகமாகிடும்”, இது யாருக்கு பொருந்துமோ இலையோ தூக்கு தண்டனை கைதிகளுக்கு பொருந்தும். மனிதாபிமான அடிப்படையில், ஒரு வேகத்தில் செய்யப்படும் குற்றங்களும், உணர்ச்சி நிலையில் செய்து விடும் தவறுகளும், செய்யாதா குற்றத்திற்காக தூக்கை அனுபவிப்பவர்களும், தூக்கு தண்டானை நாள் தெரிந்து அதை எதிர் நோக்கியிருக்கும் நிமிடங்கள் கொடுமையானது.
ஆனால் இதெல்லாம் புரட்சிகாரனக்கும், போராளிக்கும் பொருந்தாது. அவனுக்கு வாழ்வு, சாவு என அனைத்தும் புரட்சி தான். பகத் சிங் தூக்கு மேடைக்கு அழுதுகொண்டே போகவில்லை, தூக்கு மேடைக்கு போகும் முன் லெனினை படிக்கவும் தயங்கவில்லை.தூக்கு நாளை எண்ணி வருந்திக்கொண்டும் இருக்கவில்லை. அவன் மனநிலை என்ன? அவனுக்கு எப்படி மரணத்தை சந்திக்கும் தைரியம் வந்தது? அதுவும் இளமையில்? அந்த தையிரத்தை நாம் எப்படி பெறுவது? நாம் வாழும்போதே பயப்படுகிறோமே?
மரணத்தை முத்தமிடும் வீரம் பகத் சிங் என்றில்லை புரட்சிகர சக்திகளின் பொது மனநிலை. இதை இன்னும் சரியாக புரிந்துக்கொள்ளவும் மேலே கேட்ட கேள்விகளுக்கான பதிலை தேடவும் உதவும் புத்தகம் தான் “ஜூலிஸ் புசிக்கின் தூக்கு மேடை குறிப்புகள்”.
ஒரு கம்யுனிஸ்ட் என்பவன் உலகம் முழுவதும் சமதர்ம வாழ்வு, மக்களின் விடுதலை எனபதை குறிக்கோளாக கொண்டும், இன்றைய அடக்கு முறை சமுதாயத்தில் அதிகாரவர்கத்தை எதிர்த்தும், அந்த அமைப்பையே மாற்ற போராடுபவன்; தான் ஒரு கம்யுனிஸ்ட், தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் பொரும்பான்மை மக்களின் நலனை எதிர்பார்ப்பவன், அதிகார வர்கத்தை சமரசமில்லாமல் எதிர்ப்பவன், போராட்டத்தை மகிழ்ச்சி என ஏற்றுக்கொண்டவன்.இடையாராது போரடுபவன்.
ஆனால் இத்தகைய சமுக மாற்றத்தையும், மக்கள் நலனையும் அவர்களை சுரண்டுவதை அனுமதிக்கும் அரசு, அதிகார வர்கம் இத்த்கைய போராளிகளை நசுக்கவே பார்க்கிறது. அவர்களின் ஓவ்வொரு செயல்பாடுகளையும் தன் வலிமையான ஊடகத்தை கொண்டு அவதூறு செய்கிறது. முடிந்தால் போலி என்கவுனடர்கள், போலி வழக்குகள் என சிறையில் அடைத்து கொடுரமாக சித்திரவதை செய்கிறது. புரட்சிகர அமைப்பயே நசுக்கிவிட தன் அறிவையும், அதிகாரத்தையும் ஆயுதத்தையும் பயன்படுத்துகிறது.
ஆனால் மார்க்ஸிய வழியில் மக்கள் நலனுக்காக போராடும் தோழர்கள் மக்கள் விடுதலைக்கான சித்தாந்தம் , அரசியல், போன்றவற்றில் நன்கு தேர்ச்சி பெற்று, அதன் மீது நம்பிக்கை வைக்கும் போது அவர்கள் இந்த் அதிகார வர்கத்தை எதிர்த்து வீசியெறியும் ஆற்றலும் மனோபலமும் பெற்றுவிடுகிறார்கள்.அவர்கள் சூழ்ச்சிகள், பொய்கள், தூரோகங்கள், வீழ்ச்சிகள் என சகலத்தையும் எதிர்த்து மீண்டு போராடும் வலிமை மிக்கவர்களாக மக்கள் முன் நிற்க்கிறார்கள். அதன் மூலம் மக்களை திரட்டுகிறார்கள். மக்களையும் இத்தகைய போராளிகளாக அரசியல்ப்படுத்துகிறார்கள்.அவர்கள் தலமையை ஏற்றுக்கொள்கிறார்கள்.இதையெல்லாம் புரிந்து கொள்ள புதிதாக போராட வருபவர்கள் தூக்கு மேடை குறிப்புகளை அவசியம் படிக்க வேண்டும்.
ஜூலிஸ் புசிக் எனும் செக் நாட்டு கம்யுனிஸ்ட்டின் மரண தண்டனையை நோக்கிய சிறை நாட்களின் குறிப்புகள் தான் “தூக்கு மேடை குறிப்புகள்” அப்பொழுது அவர் எதிர்த்தது உலகின் மிக கொடுர பாசிஸ்டான ஹிட்லர் அரசை. ஹிட்லரின் ஜெர்மெனி படைகள் செக் நாட்டை கைப்பாற்றி அங்கு ஜனநாயகத்தை நசுக்கிய போது. அங்கிருந்த கம்யுனிஸ்ட் கட்சி ரகசியமாக செயல்பட்டது.அதன் ஒரு உறுப்பினர் தான் ஜூலிஸ் புசிக். தோழர்களின் தீவிர பாசிஸ எதிர்பும், அதற்க்கு அவர்கள் மேற்கொண்ட மக்கள் திரளும்,பிராச்சாரங்களும் இவர்கள் மீது பாசிஸத்தின் கோபத்தை அதிகப்படுத்தியது அதன் விளைவாக ஒரு நாள் நள்ளிரவில் ஜூலிஸ் புசிக் கைது செய்யப்படுகிறார். எந்த நேரமும் அவருக்கு மரணதண்டனை அளிக்கப்படலாம் என்ற நிலையில் அவர் சிறைக்குறிப்புகள் விரிகிறது.
கைது செய்யப்பட்ட புசிக் தங்கள் தோழர்களை காட்டிகொடுக்குமாறு கொடுமை படுத்தப்படுகிறார். ‘என்னை எவ்வளவு வேண்டுமானலும் அடி ஆனால் நான் ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன்
” என உறுதியுடன் இருக்கிறார் புசிக். சிறை சித்திரவதைகள் கொடுரமாக மாறுகிறது. அவர் 5 அடி தூரம் சென்று தண்ணிர் குடிக்கவே தவழுவதற்க்கு 30 நிமிடம் ஆகும். அப்படியும் குடிக்க முடியாது தொண்டை வலிக்கும். எப்பொழுதும் ரத்த வாடை தான். சாப்பிட முடியாது, அதை அழகாக புசிக் சொல்லுவார் “ நான் உணவை கண்களால் தான் உண்டேன்” என்று.ஆனால் இந்த கொடுமைகளை அவர் பொருட்ப்படுத்தாவே இல்லை, அந்த நேரத்திலும் அதிகரிகளால் தன்னிடமிருந்து ஒரு வார்த்தை வாங்க முடியவில்லை என்ற மகிழ்ச்சி தான் அவருக்கு அதிகம்.
அதிகார்கள் இந்த முறை மனதளவில் அவரின் பலத்தை பலவீனப்படுத்த முனைகிறார்கள். இத்தனை நாள் கொடுரமாக தாக்கிய அவர்கள், திடிரென அவரின் மனைவியுடன் பேச வைக்கிறார்கள், “ஏன் கொடுமைகளை அனுபவிக்கிறாய், காட்டிகொடு உன் மனைவியுடன் அமைதியான வாழ்க்கை காத்திருக்கிறது’ என்று சொல்லி மனைவியை சந்திக்க ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் இவரின் மனைவியும் கூட சொல்லிவிடாதீர்கள் என்கிறார். அந்த நேரத்தில் இவரின் அன்பு மனைவியின் ஆதரவு கம்யுனிஸத்தின் மீதான நம்பிக்கை இவரை மக்ழ்ச்சிகொள்ள செய்கிறது. வழக்கம் போல தான் அது அவரின் மனதை மயிரளவும் பலவீனப்படுத்தவில்லை.
சிறையில் மோசமான உணவுகள் நடுவே மாதம் ஒரே முறை மாத்திரம் மிக சுவையான உணவு கொடுக்கப்படுகிறது, இதுவும் மேலே பார்த்த சைக்காலிஜிகள் டார்ச்சர் தான், சுவையான வாழ்க்கை இருக்க இங்கு ஏன் கஷ்ட்டபடுகிறீர்கள் காட்டிகொடுத்துவிட்டு சுவையான வாழ்க்கையை பெறுங்கள் என்பது. புசிக் அந்த உணவை உண்கிறார் அவ்வளவே.
புசிக்கின் சித்தாந்தம் அது கொடுக்கும் தைரியம் மிக முக்கியமானது, அவர் இதையெல்லாம் துன்பம என பார்க்கவைல்லை. அவர் மரணத்தை கண்டும் அஞ்சவில்லை. ஏனென்றால் யாருக்கு பயனின்றி சுயநலமாய் வாழ்ந்து மறைவதைவிட ஒரு உன்னத மக்கலள் விடுதலைக்கு மரணம் அடையும் போது அவர் நாளைய மக்கள் விடுதலையில் இருப்பார். இதை புசிக் அழகாக பதிவு செய்வார் “நான் இன்று சித்தரவதைகளை சந்திக்கலாம், ஏன் மரணம் கூட அடையலாம் ஆனால் நான் மக்கள் விடுதலைக்காக போராடி மரணம் அடைகிறேன். நாளை விடுதலை பெறும் மக்களின் மகிழ்ச்சியில் நான் வாழ்ந்துக்கொண்டே இருப்பேன்” என்கிறார். எவ்வளவு உன்னத வார்த்தைகள். எவ்வள்வு பெரிய மனோபலம்.
அவர் சித்திரவதை காயங்களுடன் சிறையில் கிட்த்தப்பட்டிருக்க அதை பார்த்து கலங்கும் தன் சிறை நண்பர்கள் அழுவதை பார்த்து எரிச்சிலடைகிறார். ”அழாதீர்கள் சந்தோஷமாகவும், உற்சாகமாக்வும் பாடல்களை பாடுங்கள், உங்கள் அனுதாப முனங்கள்களைவிட நான் அந்த எழுச்சி பாடல்களையே கேட்ட விரும்புகிறேன்” என்கிறார்.
அந்த சிறையில் நாளொரு நபர் தூக்கிற்க்கு செல்கிறார்கள். எந்த நேரத்திலும் புசிக்கும் தூக்கிற்க்கு அழைத்து செல்லப்படலாம் அதை பற்றி பொருட்படுத்தாமல் வரபோகும் ரசிய புரட்சி தினத்தை கொண்டாடும் வேலைகளில் ஈடுபடுகிறார்.அதைவிட முக்க்யமாக அங்கிருக்கும் சிறை அதிகாரிகளை நட்பாக்கி, தன் சிறை குறிப்புகளை சிறுக சிறுக செக் கம்யுனிஸ்ட் கட்சிக்கு சேர்கிறார். வேறு கட்டுரைகளுக்கான குறிப்புகளை அனுப்புகிறார் அவையெல்லாம் போய் சேருகின்றனவ என உறுதிப்படுத்திக்கொள்கிறார்.
இங்கு மிக முக்கியமான செய்தி இருக்கிறது. ஒரு கம்யுனிஸ்ட் என்பவன் ஒரு வேலையை எப்படியோ செய்துமுடிக்க வேண்டும். வசதிகள் வேண்டும், இது இருந்தால் தான் செய்வேன் அது இருந்தால் தான் செய்வேன் என பிடிவாதம் பிடிக்க முடியாது. தானக்கு எந்த வசதி கிடைக்கிறதோ அதையேஎ கருவியாக மாற்றிக்கொள்ள தெரிந்திருக்க வேண்டும். அதை புசிக் அழகாக செய்வார், சிறையில் சித்திரவதையில் இருக்கிறேன் என்று காரணம் சொல்லவில்லை, சுற்றியும் சிறை அதிகார்கள் என்று நின்றுவிடவில்லை அங்கிருந்து தான் தன் குறிப்புகளை அனுப்புகிறார். அது கட்சியின் பிற தோழர்கள் தப்பிகவும், உஷாராகவும் உதவும். இதை யாரும் அவருக்கு சொல்லவில்லை. அவரே சரியாக செய்கிறார். இது தான் கம்யுனிஸ்டின் அடிப்படை பண்பு. மக்கள் நலனுக்காக சதா சிந்த்தித்து செயல்படுவது. அதை யாரும் சொல்ல அவனுக்கு வேண்டியதில்லை, இது வேண்டும் அது வேண்டும் என காத்திரக்கவும் வேண்டியதில்லை. வசதிகளுக்காக மக்கள் விடுதலையை தள்ளிப்போட முடியாது.
இந்த மனோபலம் பூசிக்கிற்கு எப்படி வந்த்து என்பதை தூக்கு மேடை குறிப்புகள் என்ற புத்த்கம் விளக்குகிறது? அது என்ன சொல்ல வருகிறது? அதன் சாரம் என்ன?
மக்கள் விடுதலை தான் இந்த உலகின் மிக உன்னத்மானது. அதற்காக போராடுபவன் அதை விஞ்ஞானபூர்வமாக அனுகியுள்ள மார்க்ஸிய சித்தாந்தின் அறிவை பெறும் போது அவன் மனோபலம் கூடுகிறது. தன் மரணம் கூட மக்கள் விடுதலைக்காக என்கிற போது மகிழ்ச்சியைடிகிறான். அந்த நேரத்திலும் மக்கள் விடுதலை பணிகளை உற்சாகமாக செய்கிறான், சாகும் நாள் தெரிந்தும் அவன் வாழ் நாள் சந்தோஷமாகவும் உற்சாகமாகுவுமே கழிகிறது. தான் இறந்தாலும் பின்னாட்களில் விடுதலை பெற்ற மக்களின் மகிழ்ச்சியில் வாழபோவதை உணருகிறான்.இது தான் மார்க்ஸிய சித்தாந்த்தின் பலம், மேன்மை.
இது தான் பகத் சிங் தூக்கின் சில நொடிகள் முன்னும் லெனினை வாசித்த செயலின் காரணம், இது தான் இந்தியா நக்சலைடுகளை ஒடுக்கிய கோர தாண்டவத்தின் பின் எழுந்த புரட்சிகர மக்கள் திரள் அமைபின் தையிரத்தின் காரணம்.
கம்யுனிஸ்ட் வாழ்வையும் புரட்சியாகவே பார்க்கிறான் சாவையும் புரட்சியாகவே பார்க்கிறான். அத்னால் தான் தற்கொலையை பற்றிய மாவோ இப்படி சொல்லுவார் “ தற்கொலை கோழைத்தனமான நிகழுவு மாத்திரமல்ல அது தனிமனிதன் ஒருவனால சமுகத்தில் சுத்ந்திரமாக வாழமுடியவில்லை என்ற கோரத்தின், சமுகத்தின் மீதான ஒரு தனி மனிதனின் விமர்சனம்” சாக வேண்டுமா வாழா வேண்டுமா என்பதை விட அவையிரண்டும் மக்கள் விடுதலைகாக என்பதில் தான் அதன் உன்னதம் அடங்கியிருக்கிறது. .
| Reactions: |
